For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதலாவது டி20: இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

முதலாவது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

By Veera Kumar

கான்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி கான்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயோன் மோர்கன், பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

1st T20I: Clinical England thrash India by 7 wickets in Kanpur, take 1-0 lead

இந்திய அணியில் அதிகபட்சமாக டோணி 36 ரன்களும், ரெய்னா 34 ரன்களும், கேப்டன் கோஹ்லி 29 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மில்ஸ், ஜோர்டன், ப்ளங்கட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

இந்தியாவைத் தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி 18.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 51 ரன்களும், ரூட் 46 ரன்களும் எடுத்தனர், இந்திய அணியில் அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 0 என்று இங்கிலாந்து அணி முன்னிலையில் பெற்றுள்ளது.

Story first published: Thursday, January 26, 2017, 19:59 [IST]
Other articles published on Jan 26, 2017
English summary
A clinical England side thrashed India by 7 wickets with 11 balls to spare in the first Twenty20 international match here on Thursday (January 26).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X