For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கி, அணியில் திடீர் மாற்றம்.. 4வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு நிம்மதியான செய்தி.. ரன்களை குவிக்கலாம்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு நிம்மதியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என சமநிலையில் உள்ளன.

முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய படுமோசமாக தோல்வியடைந்தது.

Paralympics 2020: முதல் த்ரோவில் ஏமாற்றம்.. மிரட்டல் கம்பேக் - வெள்ளி வென்று அசத்திய யோகேஷ்Paralympics 2020: முதல் த்ரோவில் ஏமாற்றம்.. மிரட்டல் கம்பேக் - வெள்ளி வென்று அசத்திய யோகேஷ்

இந்திய டெஸ்ட் தொடர்

இந்திய டெஸ்ட் தொடர்

இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் ஆட்ட நாயகனாக விளங்கி வருபவர் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சரித்தவர் அவர் தான். அதே போல சர்ச்சைகளிலும் அவரின் பெயர் தான் முதல் அடிபடுகிறது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர், 4வது டெஸ்டில் ஆண்டர்சனை களமிறக்க தயாராக இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிர்காலத்தில் பல டெஸ்ட் போட்டிகள் வரிசையில் உள்ளது. அடுத்தடுத்து போட்டிகள் வந்துக்கொண்டே உள்ளது. எனவே தொடர்ந்து ஆண்டர்சனை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.

அதிகப்படியான ஓவர்கள்

அதிகப்படியான ஓவர்கள்

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அதிகப்படியான ஓவர்களை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசியுள்ளார். இந்திய பவுலர்கள் ஒருவர் கூட அந்த அளவிற்கு வீசவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன் மொத்தமாக 116.5 ஓவர்களை வீசியுள்ளார். அதே போல ஒல்லி ராபின்சன் 116.5 ஓவர்களை வீசி கடுமையாக உழைத்துள்ளனர்.

பணிச்சுமை

பணிச்சுமை

நாங்கள் களத்திற்கு வரும் போது, இந்த 2 வீரர்களும் அணிக்காக எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். அவர்களின் நலனும் எங்களுக்கு முக்கியமில்லை. எனவே 4வது டெஸ்டில் அவர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து என்னால் எந்த விவாதமும் தற்போது செய்ய முடியாது. இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் ஆண்டர்சன் பங்கேற்க வேண்டும் என நினைத்தார். ஆனால் வொர்க் லோட் அதிகமாகிவிடும்.

5வது டெஸ்ட்

5வது டெஸ்ட்

4வது டெஸ்டில் ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டாலும், 5வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அவர் அணியில் சேர்க்கப்படுவார். ஏனென்றால் 5வது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஓல்ட் ட்ராஃப்ர்ட் மைதானம் ஆண்டர்சனின் ஹோம் கிரவுண்ட் ஆகும். எனவே அவரின் உதவி அங்கு தேவைப்படும்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

4வது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் விலகுவதால் அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் மீண்டும் அழைக்கப்படுவார் என தெரிகிறது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த பிராட், தற்போது குணமடைந்துள்ளார். ஆனால் 5வது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மீண்டும் அழைக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதே போல சாம் கரணும் சரியாக செயல்படாமல் உள்ளதால் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய வீரர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Story first published: Tuesday, August 31, 2021, 18:40 [IST]
Other articles published on Aug 31, 2021
English summary
England pacer James Anderson might be out for 4th test against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X