இந்தியா -நியூசிலாந்து டி20 தொடர் : நியூசிலாந்தை புரட்டிப் போட்டு இந்தியா தொடர் வெற்றி

ஹாமில்டன் : இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு இடையில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரின் 3வது போட்டியில் அதிரடி வெற்றி கொண்டு இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் ஹாமில்டனில் நடைபெற்ற 3வது போட்டியிலும் அதிரடியாக ஆடி இந்தியா தொடர் வெற்றி கொண்டுள்ளது.

இந்த ஆண்டில் முதல் இரண்டு தொடர்களை இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் விளையாடிய இந்தியா, அதிரடியாக தொடர்களை வென்றது. இதையடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, முதலில் விளையாடிய டி20 தொடரில் முதலில் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்திற்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடரை கைப்பற்றியுள்ளது.

ஹாமில்டனில் நடைபெற்ற 3வது போட்டியில் இரு அணிகளும் தொடரை சமன்செய்த நிலையில், இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் அளிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 17 ரன்களை குவிக்க அடுத்த ஆடிய இந்திய அணியின் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சிக்ஸ்களை அடித்து அணியின் தொடர் வெற்றிக்கு வழிகோலினார்.

தொடரை கைப்பற்றிய இந்தியா

தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் வெற்றி பெற்று ஆண்டை வெற்றிகரமாக துவக்கியுள்ள இந்திய அணி, தொடர்ந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு முதலில் விளையாடிவரும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெற்றி கொண்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்த ஓய்வு இல்லாமல் முதல் இரண்டு தொடர்களை வெற்றி கொண்ட இந்திய அணி, உலக அளவில் கவனத்திற்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து நியூசிலாந்தில் டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ள இந்திய அணி, நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை ஆக்லாந்தில் விளையாடியது. தொடர்ந்து இன்று ஹாமில்டனில் நடைபெற்ற 3வது போட்டியில் பல்வேறு சுவாரஸ்மான சம்பவங்கள் நடைபெற்றன.

பந்துவீச்சை தேர்வு செய்த கேப்டன்

பந்துவீச்சை தேர்வு செய்த கேப்டன்

போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது தவறான முடிவாக கருதப்பட்ட நிலையில், தற்போது அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஹாமில்டனில் வானிலை மேகமூட்டமாக இருந்த நிலையில் முதல் 6 ஓவர்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

4 அடித்து ஆட்டத்தை துவக்கிய ரோகித்

4 அடித்து ஆட்டத்தை துவக்கிய ரோகித்

முதலில் கே.எல். ராகுலுடன் இணைந்து ஆட்டத்தை துவக்கிய துவக்க வீரர் ரோகித் ஷர்மா, 3வது பந்திலேயே அதிரடியாக பவுண்டரியை அடித்து டிம் சவுதியை கலங்கடித்தார். தொடர்ந்து இரண்டாவது ஓவரில் பென்னட்டின் பந்தை எதிர்கொண்ட கே.எல். ராகுல் தான் ஒன்றும் சளைத்தவனில்லை என்னும்படியாக சிக்ஸ் அடித்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் ரசிகர்களின் கண்களுக்கு ரன்களை விருந்தாக்கினர்.

"திரும்பி வந்துட்டேன்னு சொல்லு"

கடந்த போட்டிகளில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 7 மற்றும் 8 ரன்களில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பிய ரோகித் ஷர்மா, இந்த போட்டியில் தான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... என்னும்படியாக 40 பந்துகளில் 65 ரன்களை அடித்து எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்தார். கே.எல். ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 89 ரன்களை குவித்தார் ரோகித் ஷர்மா. மேலும் ஒரே ஓவரில் 3 சிக்ஸ்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார்.

நம்பிக்கையை பொய்யாக்கிய தூபே

நம்பிக்கையை பொய்யாக்கிய தூபே

ஆட்டம் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது கே.எல். ராகுல் அவுட்டாக, தொடர்ந்து 3வது பேட்ஸ்மேனாக விராட் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவம் தூபே இறக்கப்பட்டார். அவர் தனது ஆட்டத்தில் சொதப்ப, ரோகித் சர்மா 65 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து தூபேவும் ஆட்டமிழந்தார். 3வது இடத்தில் சிவம் தூபே இறக்கப்பட்டது தவறான முடிவு என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

179 ரன்களை குவித்த இந்தியா

179 ரன்களை குவித்த இந்தியா

இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயரும் விராட் கோலியும் ஆட்டத்திற்குள் வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து 46 ரன்களை குவித்தனர். விராட் கோலி 38 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்ததாக ஸ்ரேயாசும் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த மணிஷ் பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினர். இதையடுத்து இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை குவித்து ஆட்டத்தை முடித்தது.

கேன் வில்லியம்சன் அபாரம்

கேன் வில்லியம்சன் அபாரம்

அடுத்ததாக களம்கண்ட நியூசிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேன் வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வில்லியம்சனே ஆட்டத்தை வெற்றியுடன் முடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வில்லியம்சனின் இந்த அவுட், அணியின் ஆட்டத்தை திசைத்திருப்பியது.

பீல்டிங்கில் சொதப்பிய இந்தியா

பீல்டிங்கில் சொதப்பிய இந்தியா

பந்துவீச்சில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஜஸ்பிரீத் பும்ராவிற்கு இந்த ஆட்டம் கைகொடுக்கவில்லை. அவரது பௌலிங்கில் கேன் வில்லியம்சன் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அவரை அதிர வைத்தார். மேலும் நியூசிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பினர். சில கேட்ச்களை மிஸ் செய்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர். ஆயினும் இறுதி ஓவரில் ஆட்டம் மாறியது.

பரபரப்பான சூப்பர் ஓவர்

பரபரப்பான சூப்பர் ஓவர்

இந்தியாவின் முகமது ஷமி 20வது ஓவரை போட்டு, 95 ரன்களுக்கு கேன் வில்லியம்சனை வீழ்த்திய நிலையில், 3 பந்துகள் இருந்த நிலையில் ஆட்டமே திசை திரும்பியது. ஷமியின் அட்டகாசமான பௌலிங்கில் நியூசிலாந்து வீரர்கள் திணறிய போதிலும் கடைசிக்கு முந்தைய பந்தில் ஒரு ரன் அடித்து ஆட்டத்தை சமன் செய்தனர். இறுதி பந்தில் ராஸ் டெய்லர் போல்ட் அவுட் ஆனார்.

சூப்பர் ஓவரில் மோதிய அணிகள்

சூப்பர் ஓவரில் மோதிய அணிகள்

தொடர் சமன் செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் மார்டின் கப்டில் சிறப்பாக விளையாடினர். வில்லியம்சன், 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சை அடித்த நிலையில் மொத்தம் 17 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு அளித்தனர். பந்து வீசிய ஜஸ்பிரீத் பும்ரா புல் டாசில் பந்துகளை போட்டு, அவர்களின் ரன் குவிப்பிற்கு காரணமானார்.

அசால்டாக 2 சிக்ஸ்கள் அடித்த ரோகித்

அசால்டாக 2 சிக்ஸ்கள் அடித்த ரோகித்

இதையடுத்து சூப்பர் ஓவரில் இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் அதிரடி ரன்களை அளித்தனர். கே.எல். ராகுல் ஒரு பவுண்டரியை விளாச, அடுத்ததாக ரோகித் சர்மா, டிம் சவுதி பௌலிங்கில் 2 சிக்ஸ்களை அசால்ட்டாக அடித்தார். அவருக்கு இன்றைய ஆட்டம் சிறப்பாக கைகொடுத்தது. சூப்பர் ஓவரில் இந்தியா 20 ரன்களை குவித்து போட்டியையும் தொடர்ந்து தொடரையும் கைப்பற்றியுள்ளது.

பந்துவீச்சில் தேறிய நியூசிலாந்து

பந்துவீச்சில் தேறிய நியூசிலாந்து

இந்தியாவிற்கு எதிரான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஆயினும் தூபே தவிர்த்த இந்திய ஆட்டக்காரர்களின் மடைதிறந்த வெள்ளம் போன்ற ரன்களை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதேபோல அடுத்து விளையாடிய நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சனும் 95 ரன்களை சரமாரியாக குவித்தார். ஆயினும் அவருக்கு இந்த போட்டி கைகொடுக்கவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India Beat New Zealand In Super Over Thriller, Win Series
Story first published: Wednesday, January 29, 2020, 18:53 [IST]
Other articles published on Jan 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X