புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் மிக முக்கியமான 3 அறிய விஷயங்கள் நடந்துள்ளன.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சுவாரஸ்யமடைந்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் நாள் முடிவு வரை வலுவாக இருந்தது.

ஆனால் இன்று நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தில் ஒருபுறம் விக்கெட், ஒரு புறம் அதிரடி, சாதனை என பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன.

 10 விக்கெட் சாதனை

10 விக்கெட் சாதனை

இதில் முதல் விஷயமாக நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேலை கூறலாம். இந்திய அணியின் ஒரு விக்கெட்டை கூட நியூசிலாந்து அணியின் முன்னணி பவுலர்களால் எடுக்க முடியவில்லை. ஆனால் அந்த அணியின் ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் இந்தியாவின் 10 விக்கெட்களையும் சாய்த்தார். இதன் மூலம் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் கைப்பற்றிய 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் 1956ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜிம் லாகரும், 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் அனில் கும்ப்ளேவும் 10 விக்கெட்களை எடுத்திருந்தினர். அதன்பின்னர் 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜாஸ் பட்டேல் எடுத்துள்ளது அறிய நிகழ்வாக உள்ளது.

நியூசிலாந்து பாவம்

நியூசிலாந்து பாவம்

இன்று 2வது சுவாரஸ்யமாக நியூசிலாந்து அணியை " என்னை விட்டுடுங்க" என்பது போல வச்சு செய்துள்ளது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் எடுக்க, ஓரளவிற்கு விரட்டிவிடலாம் என்ற தைரியத்துடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் அவர்களின் கனவில் முழுவதுமாக மண்ணை போட்டார் கோலி. அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய 62 ரன்களுக்குள் ஒட்டுமொத்த விக்கெட்டும் சரிந்தது. இது தான் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி அடிக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

புஜாராவின் அதிரடி

புஜாராவின் அதிரடி

இவை இரண்டிற்கும் மேலாக இன்று மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. அதாவது இந்திய அணியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு புஜாரா இன்று ஓப்பனிங் களமிறங்கினார். அதுவும் மட்டை தட்டி விளையாடுபவர் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் இன்று திடீரென அதிரடி காட்டினார். 51 பந்துகளில் 29 ரன்களை விளாசியுள்ளார். இதில் குறிப்பாக சிக்ஸர் ஒன்றையும் அவர் பறக்கவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நேர முடிவு

ஆட்ட நேர முடிவு

இன்றைய நாளில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து 69 ரன்கள் எடுத்தது. இதனால் 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2ம் நாளின் முடிவில் 69 ரன்கள் சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும், புஜாரா 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ajaz patel, pujara makes 2nd day of mumbai test is historical day in test cricket
Story first published: Saturday, December 4, 2021, 19:56 [IST]
Other articles published on Dec 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X