For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதே மாதிரி சிக்ஸ்.. அதே மாதிரி அவுட்.. என்னப்பா நடக்குது இங்க.. மெய் சிலிர்க்க வைத்த ரோகித் ஷர்மா

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | மெய் சிலிர்க்க வைத்த ரோகித் ஷர்மா

மான்செஸ்டர்: அப்போ சச்சின், இப்போ ரோகித் என சிலாகித்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். ஆம், அதே மாதிரி, பந்து, அதே மாதிரி ஷாட். ரிசல்ட்டும் அதே மாதிரி சிக்ஸ்.

உங்களுக்கெல்லாம், 2003ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. செஞ்சூரியனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. சையது அன்வர் 20வது சதத்தை அந்த போட்டியில் விளாசினார். ஆனால், 75 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார் சச்சின் டெண்டுல்கர்.

மறுபடி... மறுபடி... அதே தப்பை பண்ணி தொலைத்த சர்பிராஸ்..! என்னப்பா கேப்டன்சி இது? #INDvsPAK மறுபடி... மறுபடி... அதே தப்பை பண்ணி தொலைத்த சர்பிராஸ்..! என்னப்பா கேப்டன்சி இது? #INDvsPAK

அப்பர் கட்

அப்பர் கட்

அப்போது, உலகின் அதிவேக பந்து வீச்சாளர் அக்தர் பந்தை, ஆப்சைடில், அப்பர்-கட் அடித்து, சச்சின் டெண்டுல்கர் சிக்சருக்கு அனுப்பிய காட்சி இன்னும் பல ரசிகர்கள் கண்களில் இருந்து மறையவில்லை. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது இந்தியா.

ரோகித் இன்று

ரோகித் இன்று

2வது ஓவரை அக்தர் வீசியபோது, மணிக்கு சுமார் 151 கி.மீ வேகத்தில் வந்த பந்தை அப்பர் கட் அடித்து சிக்சர் அனுப்பினார் சச்சின். இதை ஏன் இப்போது சொல்கிறோம் என்றால், இன்று, மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியிலும் அதேபோன்ற ஒரு சிக்சர் விளாசப்பட்டது. இப்போது ரோகித் ஷர்மா அதைச் செய்தார்.

கொண்டாட்டம்

27வது ஓவரை ஹசன் வீசியபோது, ஆப்சைடில் அப்பர் கட் சிக்சர் விளாசினார், ரோகித். இதை நெட்டிசன்கள், சச்சின் சிக்சரோடு ஒப்பிட்டு கொண்டாடி வருகிறார்கள். இதேபோல, ஹசன் பந்தில் 39வது ஓவரில், ஸ்கூப் ஷாட் அடித்து வகாப்பிடம் ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அவுட்டும் அதேபோல

அவுட்டும் அதேபோல

2007ம் ஆண்டு, டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார் மிஸ்பா உல் ஹக். ஆனால், ஜொகிந்தர் ஷர்மா வீசிய பந்தை, இப்படித்தான் ஸ்கூப் ஷாட் அடித்து, ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்ற, ஸ்ரீசாந்த்திடம் கொடுத்து அவுட்டானார். ரோகித் சிக்சர் விளாசியது, சச்சினையும், அவுட்டானது மிஸ்பா உல் ஹக்கையும் நினைவுபடுத்துவதாக இருந்தது. இரண்டுமே, உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின்போது நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 18:17 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
2003: Sachin hitting Shoaib for SIX 2019: Rohit Sharma hitting Hasan Ali for SIX
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X