இந்தியா Vs தென்னாப்பிரிக்கா நாளை 2வது டி20 - பிளேயிங் லெவனில் மாற்றம்.. கட்டாக் பிட்ச் ரிப்போர்ட்

கட்டாக்: இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை மாலை 7 மணிக்கு கட்டாக்கில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் கட்டாக்கிற்கு ஏற்கனவே வந்துள்ளனர்.

இந்த நிலையில், கட்டாக் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் ஏற்கனவே மோதியுள்ளனர் . அதில் இந்தியாவுக்கு மோசமான அனுபவமே ஏற்பட்டுள்ளது.

சீனியர்கள் ரெஸ்ட் ஏன்? நாட்டை விட ஐபிஎல்தான் முக்கியமா? உலக சாதனையை நழுவ விட்ட இந்தியா!சீனியர்கள் ரெஸ்ட் ஏன்? நாட்டை விட ஐபிஎல்தான் முக்கியமா? உலக சாதனையை நழுவ விட்ட இந்தியா!

கட்டாக்கில் இந்தியா

கட்டாக்கில் இந்தியா

கட்டாக்கில் நடைபெற்ற முதல் சர்வதேச டி20 போட்டியே, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தான் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு சுருண்டது. இதனை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் பின்னர் இலங்கையுடன் இந்தியா இங்கு மோதி இருக்கிறது.

Recommended Video

IND vs SA: 2nd T20-யில் Win பண்ண 3 Changes செய்யணும் | Aanee's Appeal | *Cricket
பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 187 ரன்களை எடுத்துள்ளது. அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 87 ரன்களில் சுருண்டுள்ளது. கட்டாக் மைதானம் எப்போதுமே சுழற்பநதுவீச்சுக்கு சாதகமான ஈடுகளமாக தான் செயல்பட்டு இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரே 136 ரன்கள் தான். 17 ரன்களுக்கு ஒரு முறை, இந்த ஆடுகளத்தில் விக்கெட் வீழ்ந்து இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

சராசரியாக ஒரு ஓவரில் 7 ரன்கள் மட்டுமே இந்த மைதானத்தில் அடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி தர, கட்டாக் மைதானம் சிறந்த வாய்ப்பை தரும். சாஹல், அக்சர் பட்டேல் என 2 சுழற்பந்தவீச்சாளர்களை வைத்து இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தரலாம். இதனால் தீபக் ஹுடா அணியில் சேர்க்கப்படலாம்.

சாஹலின் பங்கு

சாஹலின் பங்கு

அதே சமயம், தென்னாப்பிரிக்க அணியிலும் கேசவ் மகாராஜ் மற்றும் ஷாம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நாளைய போட்டியில் எப்படி தொடக்கத்தை தருகிறார்களோ, அதை பொறுத்து தான் இந்தியாவின் வெற்றி அமையும். கட்டாக் மைதானத்தில் அதிகபட்சாக சாஹல் 1 போட்டியில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் நாளைய ஆட்டத்தில் சாஹலின் பங்கு மிக முக்கியமானது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs south africa 2nd t20I – cuttack pitch report – India record இந்தியா Vs தென்னாப்பிரிக்கா நாளை 2வது டி20 - பிளேயிங் லெவனில் மாற்றம்.. கட்டாக் பிட்ச் ரிப்போர்ட்
Story first published: Saturday, June 11, 2022, 14:22 [IST]
Other articles published on Jun 11, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X