முதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி!

தர்மசாலா: இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில்தான் நியூசிலாந்தில் ஒரு தோல்விகரமான தொடரை சந்தித்து விட்டு பெரும் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பியுள்ளது இந்தியா. எனவே தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. சொந்த ஊரில் நடைபெறுவதால் அது இந்தியாவுக்கு பலம்தான்.

நியூசிலாந்து தொடரில் இந்தியா ஒரு நாள், டெஸ்ட் தொடர்களை இழந்தது. அதேசமயம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்று கலக்கியிருந்தது இந்தியா.

வெற்றியுடன் வந்துள்ள தெ.ஆ.

வெற்றியுடன் வந்துள்ள தெ.ஆ.

தென்னாப்பிரிக்க அணி மகத்தான ஒரு வெற்றியுடன் இந்தியா வந்துள்ளது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்றது. அதை 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதேசமயம், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா டி20 தொடரை வென்றது. இந்நிலையில் நியூசிலாந்தில் இரண்டு தொடர்களை தோற்ற இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.

டிஒய் படேல் தொடரில் சிறப்பு

டிஒய் படேல் தொடரில் சிறப்பு

இந்திய அணியைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் திரும்பியுள்ளனர். டிஒய் பாட்டீல் தொடரில் சிறப்பாக ஆடியிருந்தார் ஹர்திக் பாண்டியா. அதேசமயம், சர்வதேச அரங்கில் அவருக்கு நல்ல கேப் விழுந்துள்ளது. எனவே அவரும் கூட தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

2020ன் முதல் போட்டி

2020ன் முதல் போட்டி

புவனேஸ்வர் குமாரும் கூட நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். 2020ல் இதுதான் அவருக்கு முதல் போட்டி. ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இல்லை. எனவே அவருக்குப் பதில் கே. எல். ராகுலும், ஷிகர் தவானும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள். பிருத்வி ஷாவும் இருக்கிறார்.

உள்ளூரின் ராஜா இந்தியா

உள்ளூரின் ராஜா இந்தியா

தென்னாப்பிரிக்க அணியில் முக்கியமான வீரர்களாக ஜேன்மன் மலன், ஹெய்ன்ரிச் கிளாசன், லுங்கி நிடினி ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் நிடினி 2 போட்டிகளில் 9 விக்கெட்களை சாய்த்துள்ளார். வெளிநாடுகளில் இந்தியா தடுமாறலாம். ஆனால் உள்ளூரில் இந்தியாதான் ராஜா. இதை தென்னாப்பிரிக்காவும் பலமுறை அனுபவித்துள்ளதால் போட்டித் தொடர் சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

3 போட்டிகள் தொடர்

3 போட்டிகள் தொடர்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் முதல் போட்டி நாளை தர்மசாலாவில் துவங்கவுள்ள நிலையில், அடுத்த போட்டி வரும் 15ம் தேதி லக்னோவிலும், 3வது மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதியும் நடைபெறவுள்ளது. நியூசிலாந்தில் இழந்த தன்னுடைய வெற்றிக் கணக்கை இந்தப் போட்டியில் மீண்டும் தொடரும் முனைப்பில் இந்தியா உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India Look To Continue Dominant Home Run
Story first published: Wednesday, March 11, 2020, 19:14 [IST]
Other articles published on Mar 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X