வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது.. இப்ப இதுதான் கோஹ்லியின் மைன்ட் வாய்ஸ்!

Posted By:
அதிரடி காட்டிய விராட் கோஹ்லி...இத்தனை சாதனையா?- வீடியோ

செஞ்சுரியன்: சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஜாம்பவான்களையெல்லாம் சப்ஜாடாக தூக்கி ஓரம் கட்டி விட்டார் விராத் கோஹ்லி. 35வது ஒரு நாள் சதத்தைப் போட்டுள்ள அவர் பல சாதனைகளை அடித்து நொறுக்கி அள்ளி விட்டார்.

29 வயதிலேயே சாதனைகளைக் குவித்துள்ள அசகாய சூரராக வலம் வருகிறார் கோஹ்லி. ரசிகர்களால் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை படு சாதாரணமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார் கோஹ்லி.

சதம் போடுவது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. சரமாரியாக போட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறார். இதோ இப்போது ஒரு நாள் போட்டிகளில் 35வது சதத்தைப் போட்டு பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

செஞ்சூரியனில் சாதனை சதம்

செஞ்சூரியனில் சாதனை சதம்

செஞ்சூரியனில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கடைசி மற்றும் 6வது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி அபாரமாக ஆடி 129 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சேஸிங்கில் சாதனை

சேஸிங்கில் சாதனை

இது வெற்றிகரமாக செஸ் செய்யப்பட்ட போட்டியில் அவர் போட்ட 19வது சதமாகும். இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வென்று தென் ஆப்பிரிக்காவை அதிர வைத்தது. தென் ஆப்பிரிக்காவில் இந்தியா பெற்ற அபாரமான முதல் ஒரு நாள் தொடர் வெற்றி இதுவாகும்.

சாதனை வீரர் கோஹ்லி

சாதனை வீரர் கோஹ்லி

தனது 200வது இன்னிங்ஸில் 35வது சதத்தை எடுத்துள்ளார் கோஹ்லி. சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்ய எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ்கள் 309 ஆகும்.

ஒரே தொடரில் 3 சதம்

ஒரே தொடரில் 3 சதம்

இரு நாடுகளிடையிலான தொடர் ஒன்றில் 3 சதம் போட்ட முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லிக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கங்குலியும், விவிஎஸ் லட்சுமணும் இதுபோல 3 சதம் போட்டுள்ளனர். ஆனால் -கங்குலி 2003 உலகக் கோப்பை போட்டியிலும், விவிஎஸ் 2004 விபி சீரிஸ் தொடரிலும் இதைச் செய்திருந்தனர்.

30 வயசுக்குள்ளேயே

30 வயசுக்குள்ளேயே

30 வயதில் அதிக ஒரு நாள் சதங்களைப் போட்ட வீரரும் கோஹ்லிதான். சச்சின் டெண்டுல்கர் 34 சதங்களையும், கெய்ல் 19 சதங்களையும், கங்குலி 18 சதங்களையும், டிவில்லியரர்ஸ் 16 சதங்களையும் 30 வயதில் போட்டுள்ளனர்.

அதி வேக 17,000

அதி வேக 17,000

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 17,000 ரன்களைக் குவித்த வீரரும் கோஹ்லிதான். இதற்கு முன்பு 381 இன்னிங்ஸில் ஹசிம் ஆம்லா 17,000 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. அதை 363 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார் கோஹ்லி.

Story first published: Saturday, February 17, 2018, 10:20 [IST]
Other articles published on Feb 17, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற