For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சுத்த வேஸ்ட்டா இருக்காரே.. !!” இந்திய முன்னணி வீரரை விட்டு விளாசிய ஆகாஷ் சோப்ரா.. இப்படியா செய்வது

பெங்களூரு: இந்திய அணியில் ஒருவர் நேரம் மற்றும் வாய்ப்புகளை வீணடித்து வருவதாக ஆகாஷ் சோப்ரா தாக்கியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் சூடுபிடித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுக்க, இலங்கை 109 ரன்களுக்கெல்லாம் சுருண்டது.

இதனால் 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 303 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனால் 3வது நாளிலேயே ஆட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான இன்னிங்ஸ்

சிறப்பான இன்னிங்ஸ்

இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்து அசத்தினார். இதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் 87 பந்துகளில் 67 ரன்களை குவித்து அணிக்கு உதவினார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா 2வது இன்னிங்ஸில் 46 ரன்கள் அடித்தார். ஆனால் மயங்கின் நிலைமை மட்டும் மிகவும் மோசமாக உள்ளது.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டான அவர், 2வது இன்னிங்ஸில் லசித் எம்புல்டேனியா பந்துவீச்சில் எட்ஜாகி 22 ரன்களுக்கு அவுட்டானார். அணியில் சுப்மன் கில்லை களமிறக்க அதிக வாய்ப்புகள் இருந்த போதும், மயங்க் மீது அதீத நம்பிக்கை வைத்து டிராவிட் களமிறக்கினார். ஆனால் அதெல்லாம் பலனளிக்காமல் உள்ளது.

ஆகாஷ் சோப்ரா தாக்கு

ஆகாஷ் சோப்ரா தாக்கு

இந்நிலையில் மயங்க் அகர்வால் மீது அகாஷ் சோப்ரா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், மயங்க் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவருக்கு, அதிர்ஷ்டவசமாக் மும்பை டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக ஆடினார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

Recommended Video

2 முக்கிய வீரர்களின் நிலை எதுவும் தெரியல - CSK CEO Kasi Viswanathan
கடைசி எச்சரிக்கை

கடைசி எச்சரிக்கை

துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் காயத்தால் வெளியே உள்ளார். அடுத்த போட்டியில் வந்துவிடலாம். எனவே அதற்குள் நீங்கள் வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் தேவையில்லாத முயற்சிகளை மேற்கொண்டு சொதப்புவது நல்லதுக்கு கிடையாது, கவனாம இருங்கள் என ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Monday, March 14, 2022, 14:15 [IST]
Other articles published on Mar 14, 2022
English summary
Former Cricketer Aakash chopra feels young player wasting his opportunities' against Sri Lanka tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X