For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இளம் படை அசத்தல்..டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறிய இந்தியா... இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மிகப்பெரும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடைரில் முன்னிலை வகித்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

இறுதி போட்டி

இறுதி போட்டி

இரு அணிகள் மோதிய 4வது டெஸ்ட் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ரோகித் மட்டுமே சிறப்பாக ஆட மற்ற கோலி, சுப்மன் கில், ரஹானே ஆகியோர் சொதப்பினர்.

 நம்பிக்கை

நம்பிக்கை

இதனையடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தால் சதம் ( 101) அடித்தார். மேலும் அறிமுக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் - அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் முறையே 96 & 43 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 365 ரன்கள் சேர்த்தது. மேலும் இங்கிலாந்தை விட 160 ரன்கள் முன்னிலை வகித்தது.

சொதப்பல்

சொதப்பல்

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அஸ்வின் & அக்‌ஷர் சுழலில் சிக்கி திணறினர். அணியில் டான் லாவ்ரன்ஸ் மட்டும் அரை சதம் அடிக்க மற்ற அனைவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஜோ ரூட் 30 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் அந்த அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 - 1 என தொடரையும் கைப்பற்றியது.

இறுதி போட்டியில் இந்தியா

இறுதி போட்டியில் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து ஏற்கனவே இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி நடக்கவுள்ளது.

Story first published: Sunday, March 7, 2021, 10:18 [IST]
Other articles published on Mar 7, 2021
English summary
India Won the Test Series against England, Enter into the Test Championship final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X