செலக்ஷனே சரியில்லை.. பிரசாத் குழுவை மொத்தமாக மாற்ற வேண்டும்.. யுவராஜ் சிங்

பிரசாத் குழுவை மாற்ற வேண்டும்: யுவராஜ் சிங்

மும்பை : தேசிய அளவில் சிறந்த கிரிக்கெட் அணியை தேர்வு செய்ய சிறந்த தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவை மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள யுவராஜ்சிங் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.

நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்றாற்போல இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தேர்வுக்குழுவின் பணி சாதாரணமானதல்ல என்று கூறியுள்ள யுவராஜ்சிங் சிறந்த தேர்வுக்குழுவை தேர்ந்தெடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் இந்திய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 சிறந்த தேர்வுக்குழு வேண்டும்

சிறந்த தேர்வுக்குழு வேண்டும்

சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற கிரிக்கெட்டின் பிரபல ஆல் ரவுன்டர் யுவராஜ்சிங், தேசிய அளவில் செயல்பட்டுவரும் பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு முறையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 தேர்வுக்குழு பணி எளிதல்ல

தேர்வுக்குழு பணி எளிதல்ல

நவீன கிரிக்கெட்டிற்கு ஏற்ப சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தேர்வுக்குழுவின் பணி என்பது எளிதானதல்ல என்றும் அதற்கேற்ப சிறப்பாக செயல்படும் தேர்வாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 சிறந்த அணி வேண்டும்

சிறந்த அணி வேண்டும்

அடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், இந்தியாவில் சிறந்த அணியை தேர்ந்தெடுக்கும் சிறப்பான தேர்வாளர்கள் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 வீரர்கள் மன உளைச்சல்

வீரர்கள் மன உளைச்சல்

இந்திய அணியின் வீரர்களுக்கு ஆதரவாக செயல்படுவேன் என்றும் யுவராஜ்சிங் உறுதிபட தெரிவித்துள்ளார். வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் செயல்பட்டால் மட்டுமே, அவர்களின் முழு திறமையை வெளிக் கொணர முடியும் என்றும் கூறியுள்ளார் யுவராஜ்.

 கங்குலி சிறப்பான முடிவெடுப்பார்

கங்குலி சிறப்பான முடிவெடுப்பார்

உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்ளது போல இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வீரர்கள், நெருக்கடி மற்றும் அச்சம் இல்லாமல் விளையாட முடியும். இதை தற்போதைய தலைவர் கங்குலி சிறப்பாக செயல்படுத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 கால அவகாசம் வேண்டும்

கால அவகாசம் வேண்டும்

மேலும் மும்பையை சேர்ந்த ஆல்ரவுண்டர் சிவம் தூபே குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தூபே அடுத்த யுவராஜ்சிங் என்று எல்லோரும் கூறுகின்றனர். என்னுடன் அவரை ஒப்பிட வேண்டாம். அவரது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த அவருக்கு காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian batsman Yuvraj singh slammed Indian selection committee and request to not compare Dube with him
Story first published: Tuesday, November 5, 2019, 13:48 [IST]
Other articles published on Nov 5, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X