For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 வயதில் தாயை இழந்தவர்.. அறிமுக டெஸ்டில் சதம்..! போராடி முன்னேறிய பிரித்வி ஷா நெகிழ்ச்சி கதை..!

Recommended Video

Prithivi Shaw suspended : இந்திய இளம் வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்..விளையாட தடை - வீடியோ

மும்பை: விடா முயற்சி, அருமையான பேட்டிங் திறன் என முன்னான் ஜாம்பவான் உள்ளிட்ட அனைவராலும் பாராட்டப்பட்ட இளம் வீரர் பிரித்வி ஷா. கிரிக்கெட்டில் அவரது திறமைகளை பார்க்கலாம்.

மகாராஷ்டிராவில் 1999ல் பிறந்தார் பிரித்வி ஷா. 4 வயது இருக்கும் போது தாயை இழந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை அணிய வேண்டும் என்பதே பிரித்வி ஷாவின் குறிக்கோள்.

பிரித்வி ஷாவும், அவரது தந்தையும் வாழ்க்கையில் அனைத்து நாட்களையும் கிரிக்கெட்டிற்காக அர்ப்பணித்தனர். 2010ம் ஆண்டு ஏஏபி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை தந்துஇ ஷாவை கிரிக்கெட் பயிற்சியை தொடர அனுமதியளித்தது. இந்தியன் ஆயில் நிறுவனமும் ஸ்பான்சர்ஷிப் அளித்தது.

ரஞ்சியில் அறிமுகம்

ரஞ்சியில் அறிமுகம்

பிரித்வி ஷா 2016-17 ரஞ்சி டிராபி அரை இறுதி போட்டி மூலம் தனது முதல் வகுப்பு ஆட்டத்தில் அறிமுகமானார். அந்த போட்டியில் மும்பை அணிக்கு விளையாடி 2வது இன்னிங்ஸில் தனது முதல் சதத்தை பதிவு செய்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

இளம் வயதில் சதம்

இளம் வயதில் சதம்

அதன் மூலம் இளம் வயதில் ரஞ்சி டிராபி தொடரில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்ததாக துலீப் டிராபி முதல் போட்டியிலும் சதம் அடித்தார். ரஞ்சி டிராபி, துலீப் டிராபி மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டி என மூன்றிலும் அறிமுக போட்டிகளில் சதமடித்து அசத்தினார்.

உலக கோப்பை கேப்டன்

உலக கோப்பை கேப்டன்

2018ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் பிரித்வி ஷா இந்திய அணியின் கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ் மேனாகவும் விளங்கி, கோப்பையை பெற்று தந்தார். கடந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா ரூ. 1.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல்லில் அரைசதம்

ஐபிஎல்லில் அரைசதம்

ஐபிஎல்லில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமைக்கு உரியவர். கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற சஞ்சு சாம்சன் சாதனையை சமன் செய்தார்.

14 ஆட்டங்கள், 7 சதம்

14 ஆட்டங்கள், 7 சதம்

முதல் வகுப்பு போட்டிகளில் 14 ஆட்டங்களில் 7 சதங்கள் உட்பட 1,418 ரன்கள் எடுத்துள்ளார். முதல் வகுப்பு போட்டிகளில் அவரின் பேட்டிங் சராசரி 56.72 ஆகும். பிரித்வி ஷா ஆட்டத்தை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கணிப்புகளை தெரிவித்தனர்.

அடுத்த சச்சின்

அடுத்த சச்சின்

அடுத்த சேவாக், அடுத்த சச்சின் என பலரும் கூறினர். சுரேஷ் ரெய்னா பிரித்வி ஷாவை அடுத்த சேவாக் என்று புகழ்ந்தார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணிக்கு மற்றும் ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்ததாக கூறினார். சச்சின், லாராவை கலவை பிரித்வி ஷா என வாகனுக்கு பதில் சொன்னார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் மார்க் வாக்.

சச்சின் வழங்கிய விருந்து

சச்சின் வழங்கிய விருந்து

சேவாக் போன்று தயங்காமல் பந்தை எதிர்கொள்ளும் திறன், சச்சின் போன்று பந்தை திசைக்கு ஏற்ப ஆடும் தன்மை பிரித்வி ஷாவிற்கு இருக்கிறது என்று தாதா கங்குலி கூறியுள்ளார். அவரது ஆட்டத்திறனை பாராட்டி, சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் விருந்து ஒன்றையும் அளித்தார். அந்த அளவுக்கு பாராட்டப்பட்ட பிரித்வி ஷா, ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி தடைக்கு ஆளானது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

Story first published: Tuesday, July 30, 2019, 22:12 [IST]
Other articles published on Jul 30, 2019
English summary
Indian cricket world shocked about young player prithvi shaw ban.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X