For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வருகிறார் மெக்கிராத்.. இனி இவரின் கையில் இந்திய கிரிக்கெட் அணியின் "வேகம்"!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது தொடர்பான ஐந்து ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியமும், சென்னையைச் சேர்ந்த எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனும் போட்டுள்ளன.

அதன்படி இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்து அனுப்பும் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பவுண்டேஷனில் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியை முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் கிளன் மெக்கிராத் அளிப்பார்.

வளரும் வீரர்களுக்கு மட்டுல்லாமல் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பந்து வீச்சாளர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும்.

டைரக்டர் மெக்கிராத்

டைரக்டர் மெக்கிராத்

எம்ஆர்எப் பவுண்டேஷனின் இயக்குநராக மெக்கிராத் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

எலைட் மற்றும் பிராபபிள்ஸ்

எலைட் மற்றும் பிராபபிள்ஸ்

இங்கு பயிற்சிக்கு வரும் பந்து வீச்சாளர்களை எலைட் மற்றும் பிராபபிள்ஸ் என்று இரு பிரிவாக பிரித்து பயிற்சி அளிப்பார்கள்.

எலைட் பிரிவில் அணி வீரர்கள்

எலைட் பிரிவில் அணி வீரர்கள்

கிரிக்கெட் வாரியம் தனது அணிக்காக தேர்வு செய்யும் வீரர்களை எலைட் பிரிவில் சேர்த்துப் பயிற்சி தருவார்கள். மற்ற இளம் வீரர்களுக்கு பிராபபிள்ஸ் பிரிவில் சேர்த்து பயிற்சி தரப்படும்.

முகாமுக்கு 10 பேர்

முகாமுக்கு 10 பேர்

ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் அதிகபட்சம் 10 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சிக் காலம் 2 வாரமாகும்.

வருடத்திற்கு 3 முறை

வருடத்திற்கு 3 முறை

மெக்கிராத், பயிற்சிக்காக வருடத்திற்கு மூன்று முறை சென்னை வருவார். அதாவது ஜனவரி - பிப்ரவரி, ஜூன்- ஜூலை மற்றும் ஆகஸ்ட் - செப்டம்பர் இடையிலான காலத்தில் அவர் சென்னை வருவார்.

செப்டம்பர் முகாம் தொடக்கம்

செப்டம்பர் முகாம் தொடக்கம்

தற்போது செப்டம்பர் மாத முகாம் தொடங்கியுள்ளது. இதில் பிராபபிள்ஸ் பிரிவில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து பயிற்சி தரப்படவுள்ளது. இவர்களுக்கு மொத்தமாக 30 நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

1987 முதல்

1987 முதல்

1987ம் ஆண்டு முதல் இந்த பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. உலகின் முன்னணி வேகப் பந்து வீச்சு பயிற்சி அகாடமியாக இது உருவெடுத்துள்ளது.

ஜாம்பவான்கள் வருகை

ஜாம்பவான்கள் வருகை

இந்த அகாடமியின் பயிற்சி முகாம்களுக்கு கிரேக் சேப்பல், ஜெப் தாம்ப்சன், இயான் சேப்பல், ஜோயல் கார்னர், ரோட்னி மார்ஷ் போன் ஜாம்பவான்கள் வந்து பயிற்சி கொடுத்துள்ளனர்.

Story first published: Wednesday, September 3, 2014, 16:23 [IST]
Other articles published on Sep 3, 2014
English summary
The MRF Pace Foundation has inked an agreement with the Board of Control for Cricket in India (BCCI) which will send pace bowlers with potential to the academy for training under former Australian great Glenn McGrath. The broad lines of the MOU includes a tie-up between the pace foundation and the BCCI for the next five years; BCCI to send existing and pace bowlers with potential to the academy to train under the Director of the Pace Foundation, McGrath; bowlers to be split into Elite and Probables categories; and training to be imparted in batches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X