For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் வந்த சிறுவன்.. ப்ளீஸ்! ஒன்னும் செய்யாதீங்க.. ரோகித் நெகிழ்ச்சி

மெல்போர்ன் : டி20 உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அப்போது, ஆட்டத்தின் இறுதி கட்டத்தின் போது திடீரென்று போட்டி நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சியிலும் என்ன நடந்தது என்று காட்டவில்லை.

டி20 உலகக்கோப்பை 2022 புள்ளிப்பட்டியல்: அரையிறுதியில் யார்? யார்? மோதல்.. போட்டிகள் எப்போது? டி20 உலகக்கோப்பை 2022 புள்ளிப்பட்டியல்: அரையிறுதியில் யார்? யார்? மோதல்.. போட்டிகள் எப்போது?

சிறுவனின் செயல்

சிறுவனின் செயல்

ஆனால் கவலைப்படாதீங்க.. நாங்க தான் இருக்கோமே. இந்தியாவின் வெற்றிஉறுதியான நிலையில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த ஒரு சிறுவன், இந்திய தேசிய கொடியை ஏந்தியவாறு, உணர்ச்சி வசப்பட்டு, மைதானத்திற்குள் பாதுகாப்பை மீறி ஓடி வந்தார். அந்த சிறுவனுக்கு ஒரு 8 முதல் 10 வயது தான் இருந்திருக்கும்.

பாதுகாவலர்

பாதுகாவலர்

ஆனால், மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள். அந்த சிறுவனை ஓடி பிடித்து அடிக்க முயன்றதோடு, அவனை தரதரவென்று இழுத்து செல்ல முயன்றனர். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரோகித் சர்மாவும், முகமது ஷமியும் ஓடி வந்து பாதுகாவலரை அந்த சிறுவனை விட்டு விடும் படி கூறினர்.

ரோகித் கோரிக்கை

ரோகித் கோரிக்கை

சிறுவனை அடிக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக அழைத்து செல்லுங்கள் என்றும் ரோகித் கூறினார். இதனையடுத்து பாதுகாவலர்கள் அந்த சிறுவனை அப்புறப்படுத்தினர். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்து புவனேஸ்வர் குமாரிடம் ஆட்டோகிராப் கேட்டார்.

அபராதம்

அபராதம்

அப்போதும், பாதுகாவலர்கள் அந்த ரசிகனை அழைத்து சென்றனர். இது குறித்து இந்திய அணி எவ்வித புகாரும் தெரிவிக்காததால், இந்த ரசிகர் 70 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பில் அபராதம் கட்டுவதிலிருந்து தப்பித்து சென்றார். தற்போது இந்த சிறுவனும் அபராதம் கட்ட தேவையிருக்காது. எனினும் இது பாதுகாப்பு குறைபாடாகவே கருதப்படுவதால், அடுத்த போட்டியில் மேலும் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும்.

Story first published: Sunday, November 6, 2022, 18:33 [IST]
Other articles published on Nov 6, 2022
English summary
Indian Kid intruded to the Ground and Rohit saves from the security official
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X