"ஆஃப்" தினத்தில் நீங்க ஆபீஸில் வேலை பார்க்கலாம்.. இவங்க என்ன பண்றாங்கன்னு பாருங்க!

Posted By:

கான்பூர்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்னும் சில நேரத்தில் கான்பூர் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக கடந்த இரண்டு நாட்களாக இரண்டு அணிகளும் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணி இன்று அதிகாலையில் இருந்து கடுமையான வலை பயிற்சியில் ஈடுபட்டது. இதுவரை இந்திய மண்ணில் ஒருமுறை கூட நியூஸிலாந்திடம் சீரிஸ் தோல்வி அடைந்ததில்லை என்பதால் கடுமையான பயிற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இந்திய வீரர்கள் நேற்று சில மணி நேரம் ஒய்வு எடுத்தனர். இதை பற்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாடாத ஓய்வு நேரத்தில் என்ன செய்வார்கள் என தெரியுமா என டிவிட்டரில் புகைப்படங்களுடன் தெரிவித்து இருக்கிறது பிசிசிஐ.

 கடைசி ஒருநாள் போட்டி

கடைசி ஒருநாள் போட்டி

இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் கான்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக கடந்த இரண்டு நாட்களாக இரண்டு அணிகளும் கான்பூர் மைதானத்தில் மிகவும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை இந்தியாவில் நடந்த எந்த ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி வென்றதே இல்லை என்பதால் அந்த சாதனையை தக்க வைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. அதை எப்படியாவது முறியடிக்க நியூசிலாந்து அணியும் திட்டமிட்டு வருகிறது.

 ஒய்வு நேரத்தில் என்ன செய்வார்கள் தெரியுமா

ஒய்வு நேரத்தில் என்ன செய்வார்கள் தெரியுமா

இந்த நிலையில் கடுமையான பயிற்சிக்கு பின் இந்திய வீரர்கள் நேற்று சில மணி நேரம் ஒய்வு எடுத்தனர். அந்த சமயத்தில் சில வித்தியாசமான போட்டிகளையும் விளையாடினார்கள் . இதை இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாடாத ஓய்வு நேரத்தில் என்ன செய்வார்கள் என தெரியுமா என விளக்கி டிவிட்டரில் புகைப்படங்களுடன் தெரிவித்து இருக்கிறது பிசிசிஐ. மேலும் அவர்களின் ஹாபி என்ன என்றும் தெரிவித்து இருக்கிறது.

பில்லியர்ட்ஸ் விளையாடிய கோஹ்லி

கிரிக்கெட்டில் கலக்கும் கோஹ்லி பில்லியர்ட்சிலும் கலக்குவார் என்பது பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த புகைபபடம் மூலம் தெளிவாகி இருக்கிறது. பயிற்சி முடித்துவிட்டு வந்ததும் அவர் பில்லியர்ட்ஸ் விளையாடுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. இவருடன் சேர்ந்து டோணியும் பில்லியர்ட்ஸ் விளையாடினார்.

எதிர் நீச்சல் அடி

மேலும் கடுமையான பயிற்சியில் ஈடுப்பட்ட வீரர்கள் புத்துணர்ச்சியாக இருக்க நேற்று நீச்சலும் அடித்து இருக்கின்றனர். சாதாரணமாக நீச்சல் அடிக்காமல், ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு ஜாலியாக விளையாடி இருக்கின்றனர். மேலும் இதைப்பற்றி புகைப்படங்களுக்கு பதில் வீடியோவே வெளியிட்டு இருக்கிறது பிசிசிஐ.

ஜிம்மில் ஜம்முனு டிரெய்னிங்

மேலும் விளையாடுவது மட்டும் இல்லை ஜிம்மில் உடல் ஏற்றுவதும் எங்கள் ஹாபிதான் என இந்திய வீரர்கள் நிரூபித்து இருக்கின்றனர். நன்றாக உடலை பராமரித்து வரும் ஷிகர் தவான் தொடங்கி இப்போதுதான் உடலை பராமரிக்க ஆரம்பித்து இருக்கும் சாஹல் வரை அனைவரும் ஜிம்மில் என்ன செய்கிறார்கள் என்பதை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறது பிசிசிஐ.

Story first published: Sunday, October 29, 2017, 13:22 [IST]
Other articles published on Oct 29, 2017
Please Wait while comments are loading...