For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனியர் வீரருக்கே ஆப்பு.. முகமது சிராஜுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இந்திய அணியின் பக்கா ப்ளான் - விவரம்

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர் சிராஜால் சீனியர் வீரரின் இடத்திற்கு ஆபத்து வந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. இதனால் ரசிகர்களிடையே போட்டி குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படி ஒரு தீவிரமா?.. கோலி, பண்ட் ஃபுல் ஃபார்ம்.. இந்திய அணியின் முரட்டுத்தனமான பயிற்சி - வீடியோ இப்படி ஒரு தீவிரமா?.. கோலி, பண்ட் ஃபுல் ஃபார்ம்.. இந்திய அணியின் முரட்டுத்தனமான பயிற்சி - வீடியோ

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

இந்திய அணி பயிற்சி

இந்திய அணி பயிற்சி

இந்த போட்டிக்காக இந்திய அணி சார்பில் குழு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றடைந்த முதல் 3 நாட்கள் கடுமையான குவாரண்டைனில் இருந்தனர். இதனால் தற்போது குழுவாக இணைந்து வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். விரைவில் பந்துவீச்சாளர்களுக்காக தேர்வு நடைபெறும் எனக்கூறப்படுகிறது.

பிட்ச்

பிட்ச்

இங்கிலாந்து களத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் பங்கு மிக முக்கியம். அந்த வகையில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 நட்சத்திர பவுலர்கள் உள்ளனர். இந்த கூட்டணி இந்திய அணியின் வெற்றிக்கு பல சமயங்களில் உதவியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு பிறகு தற்போது தான் இந்த மூவர் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளனர். இடைபட்ட காலத்தில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

இளம் வீரருக்கு வாய்ப்பு

இளம் வீரருக்கு வாய்ப்பு

இந்நிலையில் இந்தியாவின் ப்ளேயிங் 11ல் முகமது சிராஜை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனியர் வீரர் இஷாந்த் சர்மா இதற்காக வெளியில் உட்கார வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது சிராஜ் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்து ஆக்ரோஷ பவுன்சர்களை வீசுவார் என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இதனை பல வருடங்களாக இஷாந்த் சர்மா தான் செய்து வந்தார்.

இஷாந்தின் அனுபவம்

இஷாந்தின் அனுபவம்

இஷாந்த் சர்மா இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 12 போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றவை. இவ்வளவு பெரிய அனுபவம் இருந்தும் இஷாந்தின் வயதை இந்திய அணி நிர்வாகம் சிக்கலாக பார்க்கிறது. இஷாந்த் சர்மா 33 வயதாக போகிறது. காலில் காயத்தால் பாதிக்கபட்டிருந்த இவர், கடந்த இங்கிலாந்து தொடரில் தான் மீண்டும் அணியில் இணைந்தார். எனினும் அவரின் ஃபிட்னஸ் இன்னும் உறுதியாகாமல் உள்ளது.

ஸ்பின்னர்களுக்கான வாய்ப்பு

ஸ்பின்னர்களுக்கான வாய்ப்பு

இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜடேஜா மற்றும் அஸ்வின் கண்டிப்பாக அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்துக்கு மேற்கொண்ட 2 சுற்றுப்பயணங்களிலும் ஸ்பின்னர் மொயின் அலிக்கு எதிராக திணறியுள்ளது. இதுவே இந்திய அணியின் ஸ்பின்னர் தேர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மொயின் அலி விக்கெட் எடுத்த போது வானிலை கோடைக்காலமாக இருந்தது. இதனால் பிட்ச் வறண்டு, ஸ்பின் ஆனது. ஆனால் தற்போது சற்று மழைக்காலமாக இருப்பதால் ஸ்பின்னர்களுக்கு சவால் தான் நிறைந்துள்ளது.

Story first published: Thursday, June 10, 2021, 14:09 [IST]
Other articles published on Jun 10, 2021
English summary
Team Indian management is Trying to have Young pacer Mohammed Siraj in the playing X1 for WTC final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X