மிடில் ஆர்டரில் வந்தாலே சம்பவம் தான்.. ஃபார்முக்கு வந்த கேஎல் ராகுல்.. அன்பை பொழியும் ரசிகர்கள்!

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுன் மீண்டும் ஃபார்மிற்கு வந்ததையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அண்மைக் காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான கேஎல் ராகுல் பேட்டிங் ஃபார்ம் சொல்லி கொள்வது போல் இல்லை. குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் சிறிய அணிகளுக்கு எதிராக நன்றாக ரன்கள் சேர்த்த கேஎல் ராகுல், முக்கிய ஆட்டங்களில் அச்சத்தால் விக்கெட்டை கொடுத்து வெளியேறினார்.

இதனால் கேஎல் ராகுலுக்கு போதுமான விடுமுறை அளித்து பொறுமையாக இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும் எனவும், இன்னும் சிலர் இந்திய அணியில் இருந்து ராகுலை வெளியேற்ற வேண்டும் என்று விமர்சித்து வந்தனர்.

“இந்தியாவால் என்னங்க செய்ய முடியும்??”.. வம்பிற்கு இழுத்த வங்கதேச அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்! “இந்தியாவால் என்னங்க செய்ய முடியும்??”.. வம்பிற்கு இழுத்த வங்கதேச அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

மிடில் ஆர்டரில் ராகுல்

மிடில் ஆர்டரில் ராகுல்

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் களமிறங்கினார். அதிலும் ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்படாமல், கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வங்கதேச அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா 27, தவான் 7, கோலி 9 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

காப்பாற்றிய கேஎல் ராகுல்

காப்பாற்றிய கேஎல் ராகுல்

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், தனிஒருவனாக போராடியா ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் 11வது அரைசதத்தை கடந்தார். 9வது விக்கெட் வரை போராடிய ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. வங்கதேச அணிக்கு கவுரவமான இலக்கை நிர்ணயிக்க கேஎல் ராகுலின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

ராகுலின் சாதனை

ராகுலின் சாதனை

இதுவரை கேஎல் ராகுல் 5வது வீரராக களமிறங்கிய 11 ஒருநாள் போட்டிகளில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுதி ஓவர்களின் போது தேவைக்கேற்ப அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறார். இதனால் கேஎல் ராகுலை தொடக்க வீரராக களமிறக்காமல் மிடில் ஆர்டர் வீரராக பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

டி20 உலகக்கோப்பையில் மோசமான ஃபார்மில் இருந்த கேஎல் ராகுல், மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஃபார்மை கேஎல் ராகுல் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றும், ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடும் போது ஃபினிஷிங் செய்வதற்கும் எந்த பிரச்சினையும் வராது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
After KL Raghun returned to form in the first ODI against Bangladesh, fans have been appreciating him on social media.
Story first published: Sunday, December 4, 2022, 19:44 [IST]
Other articles published on Dec 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X