இந்தியா நியூசிலாந்து மோதும் மூன்றாவது டி-20 போட்டி... தொடரை வெல்லப்போவது யார்?

Posted By:

திருவனந்தபுரம்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது.

இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடக்க இருக்கிறது. மேலும் இந்திய அணியில் சிராஜுக்கு பதில் புதிய பிளேயர் சேர்க்கப்பட இருக்கிறார்.

நியூசிலாந்து இந்தியா மோதிய முதல் டி-20

நியூசிலாந்து இந்தியா மோதிய முதல் டி-20

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணி விவரம்

சென்ற போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இதையடுத்து அதே அணி அடுத்த போட்டியிலும் விளையாடும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி ''கேன் வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், கோலின், டாம் லாதாம், ஹென்றி நிக்கோலஸ், ஆடம் மிலான், முன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்சல் சான்டர், இஷ் சோதி, டிம் சவூதி' ஆகியோர்கள் அணியில் இடம்பெற்று விளையாடுவார்கள் என கூறப்படுகிறது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் பெரிய வகையில் இந்த போட்டியில் மாற்றம் எதுவும் செய்யப்பட இருப்பதில்லை. கோஹ்லி முதல் போட்டி முடிந்த பின் கொடுத்த பேட்டியில் , டி-20 போட்டியில் அதிக பவுலர்களுடன் களம் இறங்குவதையே தான் விரும்புவதாக கூறினார். அதையடுத்து முகமது சிராஜுக்கு பதில் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இவர் சென்ற போட்டியில் அதிகம் சொதப்பினார் என்பதால் ஓய்வு அளிக்கப்படலாம்.

மூன்றாவது டி-20

மூன்றாவது டி-20

மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 7, 2017, 8:50 [IST]
Other articles published on Nov 7, 2017
Please Wait while comments are loading...