For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை... சிவப்பை வென்றது நீலம்!

பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பையில் இந்தியா சிவப்பு அணியை வென்றது இந்தியா புளு அணி

அலூர்: இந்திய பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை போட்டியில் தீப்தி சர்மா தலைமையிலான இந்தியா ரெட் அணியை வென்றது மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய புளு அணி.

இந்திய பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை போட்டி கர்நாடக மாநிலம் அலூரில் நடந்து வருகிறது. இதில் இநதியா ரெட், இந்தியா புளு, இந்தியா கிரீன் என மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

Indian women blue wins over indian women red

14ம் தேதி துவங்கிய இந்த சாலஞ்சர்ஸ் கோப்பையின் முதல் ஆட்டத்தில் புளு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ரெட் வென்றது. அடுத்து நடந்த ஆட்டத்தில் கிரீன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் புளு அணியை வென்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் ரெட் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் கிரீன் அணியை வென்றது.

இன்று நடந்த ஆட்டத்தில் ரெட் மற்றும் புளு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ரெட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. பூனம் ராவத் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். புளு அணியின் மானசி ஜோஷி, அனுஜா படேல், தயாளன் ஹேமலதா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து விளையாடிய புளு அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து வென்றது. வெள்ளசாமி வனிதா 45 ரன்களில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் புளு அணி வென்றது. தற்போதைய நிலவரப்படி ரெட் அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. புளு மற்றும் கிரீன் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

Story first published: Friday, August 17, 2018, 13:26 [IST]
Other articles published on Aug 17, 2018
English summary
Women t20 challengers trophy cricket match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X