For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க வரலைப்பா.. இங்கிலாந்து டூரை விட்டு விலகிய இந்திய மகளிர்!

டெல்லி: இங்கிலாந்து டூரிலிருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விலகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் பரவல் காரணமாக இந்த முடிவை இந்திய அணி எடுத்துள்ளதாம். முன்னதாக ஜூன் மாதம் இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.

பின்னர் இது கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்திய அணியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஒரு ஓரமா நடத்திக்கிறட்டுமா.. பெர்மிஷன் கொடுங்களேன்.. அரசிடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐஒரு ஓரமா நடத்திக்கிறட்டுமா.. பெர்மிஷன் கொடுங்களேன்.. அரசிடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐ

3 அணிகள்

3 அணிகள்

இருப்பினும் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளை வைத்து முத்தரப்பு தொடரை செப்டம்பரில் நடத்தலாமா என்று யோசித்து வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகங்களுடன் பேச்சு நடந்து வருகிறதாம்.

பரவல் அதிகரிப்பு

பரவல் அதிகரிப்பு

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்திய அணி வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே மகளிர் அணியின் முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் சர்வதேச அளவில் பெரிய அளவிலான போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்து அணி மேற்கு இந்தியத் தீவுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் மோதி வருகிறது.

போட்டிகள் தள்ளிவைப்பு

போட்டிகள் தள்ளிவைப்பு

அதேபோல இங்கிலாந்து அணி, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுடனும் அடுத்தடுத்து ஆடவுள்ளது. வேறு எங்குமே கிரிக்கெட் போட்டிகள் இப்போதைக்கு நடைபெறவில்லை. இந்தியாவில் கூட ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போயுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியும் கூட தள்ளிப் போடப்பட்டு விட்டது நினைவிருக்கலாம்.

முகாமுக்கே வழியில்லை

முகாமுக்கே வழியில்லை

இந்தியாவைப் பொறுத்தவரை போட்டிகளை நடத்துவதை விட பயிற்சி முகாமுக்குக் கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளது. மும்பையில் கொரோனா தாண்டவமாடி வருகிறது. கொல்கத்தா, சென்னை என எந்த ஊரிலும் பயிற்சி எடுக்க முடியாத நிலைமை. பெங்களூரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பாதிப்புகள் கிடுகிடுவென அதிகரித்தபடியே உள்ளன.

Story first published: Tuesday, July 21, 2020, 18:05 [IST]
Other articles published on Jul 21, 2020
English summary
Indian women's team's England tour called off, Media sources
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X