For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனியர்களுக்கு ஆப்பு வைக்கும் இளம் வீரர்கள்- தெ.ஆப்பிரிக்க “ஏ” தொடரில் அசத்தல்

புளோம்பவுன்டைன்: இந்திய டெஸ்ட் அணியில் உள்ள மூத்த வீரர்கள் நீண்ட நாட்களாக பெரியதாக ரன்கள் அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Recommended Video

BCCI announces India squad for South Africa Test series | Oneindia Tamil

இதனால் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானேவை நீக்கிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

அதற்கு ஏற்றார் போல் தற்போது மாயங் அகர்வால், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது மேலும் சில வீரர்கள் அசத்தி வருகின்றனர்.

விஹாரி

விஹாரி

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நடுவரிசை வீரரான விஹாரி 3 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம் அடித்துள்ளார். தற்போது வரை 214 ரன்கள் அடித்துள்ள விஹாரி, 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஈஸ்வரன்

ஈஸ்வரன்

இதே போன்று அபிமன்யூ ஈஸ்வரன் 3 டெஸ்ட்களில் விளையாடி 1 சதம், 1 அரைசதம் அடித்துள்ளார். இதுவரை அவர் இந்த தொடரில் 186 ரன்கள் அடித்துள்ளார். 27 வயதான அபிமன்பூ தொடக்க வீரர் அல்லது மூன்றாவது வீரராக களமிறங்க கூடியவர்.ஏற்கனவே இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்று இருந்தார்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் நடப்பு தொடரில் 2 டெஸ்ட்களில் விளையாடி 135 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது 86 ரன்கள் விளாசி, சதத்தை நெருங்குகிறார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியிலும் தம்மால் கலக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் இஷான் கிஷன். இதே போன்று தொடக்க வீரரான பிரியாங் பாஞ்சலும் 2 டெஸ்ட்களில் விளையாடி 120 ரன்கள் எடுத்தார். இதில் 96 ரன்கள் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இதே போன்று இந்திய பந்துவீச்சாளர்களும் அசத்தி வருகின்றனர். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நவதீப் சைனி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷான் போரேல் 2 டெஸ்ட்களில் விளையாடி 6 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் தாம் வீசிய முதல் இன்னிங்சிலே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் கலக்கி வருகிறார். இளம் வீரர்களின் ஆதிக்கத்தால் தற்போது அறிவிக்கப்பட உள்ள தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் பல சீனியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, December 8, 2021, 22:59 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
Indian Youngsters scoring Big runs in SA A series. Indian Middle order Batsman Vihari scoring 3 Fifties and Abhimanyu Eswaran scored 100. Indian young guns Picks Wickets as Pressure mount for Ishant sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X