For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரவாயில்லை.. டெக்னிக்கை மாத்தாம அப்படியே ஆடுங்க.. கோலிக்கு பூஸ்ட் தந்த இன்சமாம்

கராச்சி: நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ள விராட் கோலியை பலரும் சரமாரியாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

Recommended Video

IND VS NZ | Kapil Dev says Kohli needs to Practice

இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு பாதகமாக முடிந்துள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி தொடரை பறி கொடுத்துள்ளது இந்தியா. இதனால் கேப்டன் கோலி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

பல முன்னாள் வீரர்கள், கோலியை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அவரது பேட்டிங்கும் கூட கேள்விக்குறியதாகியுள்ளது. இந்த நிலையில் இன்சமாம் உல் ஹக் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

கோலிக்கு வயசாயிடுச்சு... கண்ணு சரியா தெரியல... தோல்விக்கு காரணம் சொல்லும் கபில்தேவ்கோலிக்கு வயசாயிடுச்சு... கண்ணு சரியா தெரியல... தோல்விக்கு காரணம் சொல்லும் கபில்தேவ்

கடுமையான கண்டனங்கள்

கடுமையான கண்டனங்கள்

நியூசிலாந்திற்கு எதிராக கடந்த ஒரு மாதத்தில் இந்திய அணியினர் 3 தொடர்களை விளையாடியுள்ளனர். இதில் முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரை கைகொண்ட இந்திய அணி, அடுத்தடுத்த சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைநழுவியுள்ளது. இதையடுத்து பல்வேறு விமர்சனங்களை இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது.

பீல்ட்-அவுட் என்று விமர்சனம்

பீல்ட்-அவுட் என்று விமர்சனம்

இந்நிலையில் கடந்த சில தொடர்களில் தனது சிறப்பான ஆட்டங்களை பதிவு செய்யாத கேப்டன் விராட் கோலி, இந்த தொடர்களிலும் சரியாகவே சொதப்பினார். இந்த தொடரில் அவர் மொத்தமாக அடித்த ரன்கள் வெறும் 218. ஒரேயொரு அரைசதம் மட்டுமே அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளது. மற்றபடி அவர் ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் சொதப்பல் நம்பர் ஒன். இதையடுத்து அவர் ஆடும் டெக்னிக்கில் தவறுள்ளதாக விமர்சனங்களை சந்தித்து வருகிறார் கோலி.

டெக்னிக்கில் தவறில்லை

டெக்னிக்கில் தவறில்லை

இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில், கேப்டன் கோலியின் டெக்னிக்கில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதை அவர் தொடரலாம். கோலியின் டெக்னிக்கை பலர் விமர்சிக்கின்றனர். எனக்கு அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 70 சதங்களைப் போட்டுள்ளார். இது சாதாரண விஷயம் கிடையாது. இப்படிப்பட்ட வீரரின் டெக்னிக்கை தவறு என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

யூசுப்பும் இதுபோன்ற சூழலை சந்தித்தார்

யூசுப்பும் இதுபோன்ற சூழலை சந்தித்தார்

சிறப்பாக ஆடியும் கூட சில நேரங்களில் இதுபோன்ற சூழல் வரத்தான் செய்யும் என்றும் எல்லோருக்கும் ஏற்படுவதுதான் இது. கோலிக்கும் இது ஏற்பட்டுள்ளது. எந்த நேரமும் நம்மால் ரன்களைக் குவித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் இன்சமாம் கூறியுள்ளார். முகம்மது யூசுப் கூட மிகச் சிறந்த வீரர்தான். அவர் சிறப்பாக விளையாட முடியாத போது பலரும் டெக்னிக்கைத்தான் குறை சொன்னார்கள். அவர் என்னிடம் வந்தபோது, அதே டெக்னிக்கை வைத்துத்தான் இத்தனை காலம் சிறப்பாக விளையாடினீர்கள் என்று கூறி அவரை தேற்றினேன் என்றும் தெரிவித்தார்.

மற்றவர்கள் ஏன் ஆடவில்லை?

மற்றவர்கள் ஏன் ஆடவில்லை?

மொத்தமாக இந்திய அணி சரியாக விளையாடவில்லை. அதுதான் முக்கியக் காரணம். கோலி சரியாக விளையாடவில்லை.. மற்றவர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் ஏன் ஆடவில்லை என்றும் இன்சமாம் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இது விளையாட்டில் ஒரு பகுதி. தவிர்க்க முடியாதது. இதை ஏற்றுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுதான் நாம் பார்க்க வேண்டுமே தவிர டெக்னிக்கை குறை சொல்வது சரியானதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

டெக்னிக்கை குறை சொல்லாதீங்க பாஸ்

டெக்னிக்கை குறை சொல்லாதீங்க பாஸ்

நிச்சயம் கோலி மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார் என்றும் சிறப்பாக திரும்பி வருவார். கவலைப்பட ஏதும் இல்லை. இதுவும் கடந்து போகும் என்றும் இன்சமாம் தெரிவித்துள்ளார். அவரது டெக்னிக்கை யாரும் தயவு செய்து குறை சொல்லாதீங்க. விராட் சிறந்த வீரர். அதில் சந்தேகமே தேவையில்லை. மிகச் சிறப்பாக, வலுவாக அவர் திரும்பி வருவார் என்றும் கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக். இந்த தொடரில் விராட் கோலி 2 போட்டிகளிலும் தலா 2, 19, 3, 14 என சொற்ப ரன்களே எடுத்தார். அவரது சராசரியும் வெறும் 9.50 என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 3, 2020, 17:29 [IST]
Other articles published on Mar 3, 2020
English summary
Inzamam-ul-Haq insisted that Virat Kohli should not change his technique
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X