For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத 10 சாதனைகள்.. இந்த வருடமாவது இவற்றை முறியடிக்க முடியுமா?

By Veera Kumar

பெங்களூர்: சாதனைகள் என்பதே தகர்ப்பதற்காக படைக்கப்படுபவைதான். ஐபிஎல் தொடரிலும் அதுபோல பல சாதனைகள் படைக்கப்பட்டன. அவை உடைக்கப்பட்டுள்ளன. சில சாதனைகள் இன்னும் தொடர்கின்றன.

ஐபிஎல் தொடர் 2008ல் முதலில் தொடங்கியபோதே அப்போது கொல்கத்தா அணிக்காக ஆடிய பிரண்டன் மெக்கல்லம், பெங்களூர் அணிக்கு எதிராக 158 ரன்களை விளாசி சாதனைபடைத்தார். அந்த சாதனையை 5 வருடம் கழித்து பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல் முறியடித்தார்.

சில சாதனைகள் இன்னும் அப்படியே தொடருகின்றன. அந்த இமாலய சாதனைகள் குறித்த ஒரு பார்வை இதோ:

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 2013ல் 175 ரன்கள் விளாசியதுதான் இதுவரை தனி நபரின் ஐபிஎல் உச்சபட்ச ஸ்கோர். இந்த ஆட்டத்தின்போது 13 பவுண்டரிகளும் 17 சிக்சர்களும் விளாசினார். 66 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.

சிக்சர் மன்னன்

சிக்சர் மன்னன்

ஒரே போட்டியில் அதிகப்படியான சிக்சர் விளாசியவர் என்ற பெருமையும் கிறிஸ் கெயிலுக்கு உள்ளது. அவர் 175 ரன்கள் விளாசிய போட்டியில் அடித்து துவைத்த 17 சிக்சர்களை இதுவரை யாரும் முந்தவில்லை.

அதிக ரன்

அதிக ரன்

ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். கிறிஸ் கெயில் 175 ரன்கள் குவித்த அந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்களை குவித்திருந்தது பெங்களூர் அணி. புனே வாரியல்ஸ்ஸ அணிக்கு எதிராக 2013ல் இந்த சாதனை படைக்கப்பட்டது.

கோஹ்லி

கோஹ்லி

ஒரே தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற பெருமையை விராட் கோஹ்லி தக்க வைத்துள்ளார். அவர் 2016ல் 973 ரன்கள் சேகரித்திருந்தார். 4 சதங்கள், 7 அரைசதங்கள் இதில் அடங்கும்.

அதிக சதங்கள்

அதிக சதங்கள்

ஒரே சீசனில் 4 சதங்கள் விளாசியவர் கோஹ்லி. கடந்த வருட ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை அவர் படைத்திருந்தார் அல்லவா. அது இந்த சீசனில் முறியடிக்கப்படுமா, அல்லது அவரே முறியடிப்பாரா என்பதை பார்க்க வேண்டும்.

இன்னும் தொடர்கிறது

இன்னும் தொடர்கிறது

2008ல் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய பாகிஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சொகைல் தன்வீர் சென்னைக்கு எதிரான போட்டியில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் பெஸ்ட் பவுலிங் சாதனையாக தொடருகிறது.

இரு ஸ்டார்கள்

இரு ஸ்டார்கள்

அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்பது கடந்த வருட ஐபிஎல் போட்டியில் நடந்தது. 2வது விக்கெட்டுக்கு பெங்களூர் அணியின் கோஹ்லியும், டிவில்லியர்சும் இணைந்து 229 ரன்களை சேகரித்தனர். குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக இச்சாதனையை அவர்கள் செய்தனர். இருவருமே சதம் அடித்தது சிறப்பு.

சிஎஸ்கே சிங்கம்

சிஎஸ்கே சிங்கம்

2013ல் சிஎஸ்கே வீரர் ட்வேய்ன் பிராவோ ஒரே சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு சாதனை. இதுவரை ஒரே சீசனில் இவ்வளவு விக்கெட்டுகளை யாரும் வீழ்த்தியது இல்லை.

ஓட விட்டு அடித்தார்

ஓட விட்டு அடித்தார்

ஒரே ஆட்டத்தில் ஒரு வீரர் அதிகபட்சமாக 19 பவுண்டரிகள் விளாசியது சாதனையாக தொடருகிறது. 2011ல் பஞ்சாப் அணியின் வால்தட்டி சிஎஸ்கே அணிக்கு எதிிராகவும், 2015ல் பெங்களூரின் டி வில்லியர்ஸ் மும்பைக்கு எதிராகவும் இந்த சாதனையை செய்துள்ளனர்.

சதம் அடிக்க 30 பந்து போதும்

சதம் அடிக்க 30 பந்து போதும்

30 பந்துகளில் சதம் அடித்து விரைவாக சதம் அடித்த சாதனையை பதிவு செய்தவர் கிறிஸ் கெய்ல். 2013ல புனே வாரியர்ஸ்ஸ அணிக்கு எதிராக அவர் 175 ரன்களை குவித்தபோது இந்த சாதனையையும் அவர் படைத்தார்.

Story first published: Wednesday, April 5, 2017, 14:35 [IST]
Other articles published on Apr 5, 2017
English summary
Records are meant to be broken but some stay for a long time. Who will be the players to set new marks and erase previous one in IPL 2017?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X