For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10-வது ஐபிஎல் இறுதிப் போட்டி: 1 ரன் வித்தியாசத்தில் புனேவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது மும்பை

10-வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே அணியை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

By Mathi

ஹைதராபாத்: 10-வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அந்த அணியின் சிம்மன்ஸ் மற்றும் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

புனே அணியின் உனட்கட் முதல் ஓவரை வீசினார். தொடக்கத்திலேயே மும்பை இந்தியன்ஸ் நெருக்கடி தரும் வகையில் உனட்கட் பந்து வீச்சு இருந்தது. இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் 2-வது ஓவரை வீசினார். இந்த ஓவரிலும் மும்பையால் ரன்களை அதிகம் எடுக்க முடியாமல் திணறியது. பின்னர் 3வது ஓவரில் பர்திவ் படேல், சிம்மன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

விளாசிய ரோகித் ஷர்மா

விளாசிய ரோகித் ஷர்மா

3வது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து களத்தில் ரோகித் ஷர்மாவும் அமபட்டி ராயுடுவும் கை கோர்த்தனர். 5வது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் 6வது ஓவரில் நிலைமை தலைகீழானது. புனேயின் பெர்குசன் வீசிய பந்துகளை ரோகித் ஷர்மா விளாசித் தள்ளினார். இந்த ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் அடித்து விளாசினார் ரோகித் ஷர்மா. 6வது ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது மும்பை.

தடுமாறி 50 ரன்கள்

தடுமாறி 50 ரன்கள்

அந்த அணி ஏறுமுகத்தில் இருந்த நிலையில் அம்பட்டி ராயுடு ரன் அவுட் ஆக்கப்பட்டார். அப்போது 3 விக்கெட்டுகள் இழப்புகளுக்கு 41 ரன்களை எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ். 9-வது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எட்டியது.

பறக்கவிட்ட பொல்லார்ட் அவுட்

பறக்கவிட்ட பொல்லார்ட் அவுட்

10-வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ். 11வது ஓவரில் ரோகித் ஷர்மா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 56 ரன்களை எடுத்திருந்தது. களத்துக்கு வந்த பொல்லார்ட் சிக்சர் பறக்க விட்டு அசத்தினார். ஐபிஎல் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சிக்சர் இது. ஆனால் பொல்லார்ட் நிலைக்கவில்லை. கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார். 65 ரன்கள் எடுத்த நிலையில் 5 வது விக்கெட்டையும் பறிகொடுத்தது மும்பை அணி.

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

14-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்சர் அடித்த கையோடு அவுட் ஆகி வெளியேறினார். மும்பை அணியின் தடுமாற்றம் தொடர்ந்தது. 20வது ஓவரில் அடித்து விளையாடிய குர்னால் பாண்ட்யா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மும்பை அணியில் அதிகபட்சமாக 38 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்களை எடுத்திருந்தார் குர்னால்.

புனே வெல்ல 130 ரன்கள்

புனே வெல்ல 130 ரன்கள்

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. புனே அணி வெல்ல 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

புனே அணி

புனே அணி

புனே அணியின் ரஹானே, திரிபாதி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே ரன்குவிப்பில் வேகம் காட்டினர். ஆனால் 3-வது ஓவரில் புனே அணி 17 ரன்களை எடுத்த நிலையில் திரிபாதி விக்கெட்டை பறிகொடுத்தது. இதையடுத்து ஸ்மித் களமிறங்கினார். ஸ்மித்தும் ரஹானேவும் நிலைத்து விளையாடினர். 10 ஓவர்கள் முடிவில் புனே 1 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ரஹானே- ஸ்மித் ஜோடி ரன்களை குவித்து வந்தது.

நிலைத்து நிற்காத டோணி

நிலைத்து நிற்காத டோணி

புனே அணி 71 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து ஸ்மித்துடன் டோணி இணைந்தார். 15 ஓவர்கள் முடிவில் புனே அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் சிறிது நேரமே டோணி நிலைத்து நின்றார். 13 பந்துகளில் 10 ரன்களை எடுத்த நிலையில் டோணியும் அவுட் ஆனார். அப்போது புனே அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களை எடுத்திருந்தது.

ஒரு ரன்னில்..

ஒரு ரன்னில்..

இதனைத் தொடர்ந்து புனே தொடர்ந்து ரன்களை எடுக்க போராடியது. 49 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார் ஸ்மித். கடைசி ஓவரில் மனோஜ் திவாரி அவுட் ஆக கிறிஸ்டியன், களத்துக்கு வந்தார். புனே வெல்ல 4 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலையில் ஸ்மித் அவுட் ஆனார். இதையடுத்து கிறிஸ்டியனுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற டென்ஷனான நிலை இருந்தது. ஆனால் புனே அணியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அத்துடன் கிறிஸ்டியனும் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு புனே அணியால் 128 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதனால் ஒரு ரன்னில் மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்தது புனே அணி

மும்பை மீண்டும் சாம்பியன்

மும்பை மீண்டும் சாம்பியன்

ஐபிஎல் தொடரில் 2 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 3-வது முறையாக சாம்பியன்ஸாகி உள்ளது. ஆனாலும் புனே அணி கடைசி வரை மும்பையை கடுமையாக மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 22, 2017, 0:02 [IST]
Other articles published on May 22, 2017
English summary
Aiming to win their third title, the formidable Mumbai Indians (MI) will face an imposing challenge from the Rising Pune Supergiant (RPS) in what promises to be a riveting 'Grand Finale' of the 10th Indian Premier League (IPL) on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X