For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி.. இதெல்லாம் அவுட் கிடையாது.. துள்ளி குதித்த ரிஷப் பண்ட்டை அடக்கிய விராட் கோலி!!

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதிய 46வது ஐபிஎல் லீக் போட்டியில் போட்டியில் விராட் கோலி - ரிஷப் பண்ட் இடையே ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 187 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி ஆடி வந்தார்.

இதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்லை.. இதோட 9 ஆச்சு! தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட கோலி! இதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்லை.. இதோட 9 ஆச்சு! தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட கோலி!

எட்ஜ் ஆன பந்து

எட்ஜ் ஆன பந்து

அப்போது ஐந்தாவது ஓவரை வீசினார் இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்து கோலி பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரிஷப் பண்ட் அவுட் என துள்ளி குதித்தார்.

கோலி நகரவில்லை

கோலி நகரவில்லை

அனைத்து டெல்லி அணி வீரர்களும் விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்தார் என குஷியில் குதித்தனர். ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை. விராட் கோலி அவுட் இல்லை என திட்டவட்டமாக அங்கேயே நின்றார்.

பரபரப்பு

பரபரப்பு

இதனால், பரபரப்பு எழுந்தது. இரு கள அம்பயர்களும் பேசி, மூன்றாவது அம்பயருக்கு அனுப்பினர். ரீப்ளேவில் பந்து எட்ஜ் ஆகி செல்லும் போது, ஒரு இன்ச் இருக்கும் போது தரையில் பட்டு பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகளுக்குள் பந்து செல்கிறது.

அவுட் இல்லை

அவுட் இல்லை

மேலும், பந்தை கேட்ச் பிடிக்கும் போது கோலி அதை கவனிப்பதும் ரீப்ளேவில் தெளிவாக தெரிந்தது. அதனால் தான் கோலி அவுட் இல்லை என திட்டவட்டமாக நின்றார். மூன்றாவது அம்பயர் அவுட் இல்லை என தீர்ப்பளித்தார்.

டெல்லி ஏமாற்றம்

டெல்லி ஏமாற்றம்

ஆனால், அதனால் ஏமாற்றமடைந்த இஷாந்த் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தனர். அப்போது கோலி, இஷாந்த்திடம் சென்று பந்து தரையில் பட்டு விட்டது எனக் கூறி சமாளித்து அனுப்பினார்.

என்ன பேசி இருப்பார்கள்?

என்ன பேசி இருப்பார்கள்?

பின்னர் ரிஷப் பண்ட் பக்கம் சென்ற கோலி "பந்து தரையில்பட்டு தானே கேட்ச் பிடித்தாய்.. இதற்கு எப்படி அவுட் கேட்க முடியும்" என்ற பாணியில் ஏதோ பேசினார் கோலி. ரிஷப் பண்ட், தான் கேட்ச் என நினைத்ததாக கையை ஆட்டி பதில் கூறினார்.

கப்சிப் ஆன வீரர்கள்

கப்சிப் ஆன வீரர்கள்

அம்பயர்கள் முடிவில் திருப்தி இல்லாவிட்டாலும், நாளை இந்திய அணியில் கோலியின் கீழ் தான் ஆட வேண்டும் என்பதால் இஷாந்த் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் கப்சிப்பென இருந்து விட்டனர்.

Story first published: Sunday, April 28, 2019, 23:39 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
IPL 2019 DC vs RCB : Virat Kohli reacts quickly denies Rishabh Pant catch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X