அவரை எல்லாம் நம்பி டீமுக்குள்ள விட முடியாது.. பிசிசிஐக்கு “நோ”.. ஒன்று திரண்ட ஐபிஎல் அணிகள்!

மும்பை : ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிய பிசிசிஐ, தேசிய கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த பிசியோதெரபிஸ்டை அனுப்ப உள்ளது.

இந்த திட்டத்துக்கு ஐபிஎல் அணிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் வெளி நபரை எந்த நம்பிக்கையில் ஒரு ஐபிஎல் அணியின் பாதுகாப்பு சூழலுக்குள் அனுமதிப்பது? இது ஆபத்தானது என்பதே முதல் காரணம்.

ரசிர்களின் ஏக்கங்கள்... கனவுகள்.. பூர்த்தி செய்த உலக கோப்பை நாயகன்... கபில்தேவ்

மோசமான சம்பவங்கள்

மோசமான சம்பவங்கள்

கடந்த காலங்களில் தேசிய கிரிக்கெட் அகாடமியால் காயமடைந்த இந்திய அணி வீரர்களின் நிலை மோசமான சம்பவங்கள் நடந்தேறி உள்ளன. அதனால், அவரை தங்கள் வீரர்களுடன் நேரம் செலவிட ஐபிஎல் தொடரின் போது அனுமதிக்க முடியாது என சில அணிகள் இரண்டாவது காரணமாக கூறி வருகின்றன.

அவசரகோலத்தில் ஐபிஎல்

அவசரகோலத்தில் ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட தொடருக்கான ஏற்பாடுகள் அவசரகோலத்தில் நடந்து வருகிறது. அதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு முழுமுதற் காரணம்.

தாமதம்

தாமதம்

மார்ச் மாதமே துவங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டு டி20 உலகக்கோப்பை நடக்க இருந்த நாட்களில் நடக்க உள்ளது. செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் துவங்கும் என்ற அறிவிப்பே சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

குறுகிய காலத்தில் வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த உள்ள பிசிசிஐ, கடந்த நான்கு, ஐந்து மாதமாக கிரிக்கெட் பயிற்சி இன்றி இருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு இது வரை எந்த பயிற்சி முகாமும் நடத்தவில்லை. இனி அது சாத்தியமும் இல்லை.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

நவம்பர் மாதம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளனர். அந்த தொடருக்கு முன் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ முதலில் திட்டமிட்டது.

உடற்தகுதி

உடற்தகுதி

ஆனால், தற்போது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளில் மூழ்கி உள்ளதாலும், ஐபிஎல்லுக்கு தயாராக வீரர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் பிசிசிஐயால் பயிற்சி முகாம் நடத்த முடியாத நிலை உள்ளது. எனினும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணி வீரர்களின் உடற்தகுதி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பிசிசிஐ.

பிசியோதெரபிஸ்ட்

பிசியோதெரபிஸ்ட்

அதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கௌஷிக்கை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க திட்டமிட்டது பிசிசிஐ.

ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு

ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு

இந்த திட்டத்துக்குத் தான் ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு அணியும் பிசிசிஐ அறிவுறுத்தலின் படி தங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மட்டுமே இடம் பெறும் வகையில் உயிர் பாதுகாப்பு சுழலை ஏற்படுத்த உள்ளன. அதில் வெளி நபரான ஆஷிஷ் கௌஷிக்கை எப்படி அனுமதிக்க முடியும்? என அனைத்து ஐபிஎல் அணிகளும் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட புகார் பட்டியல்

நீண்ட புகார் பட்டியல்

மேலும், இதற்கு முன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் புவனேஸ்வர் குமாரின் குடல் இறக்கத்தை முன் கூட்டியே கண்டறியாதது, கேதார் ஜாதவ் காயம் குணமடையாத நிலையில் அவரை அணியில் இடம்பெறச் செய்தது, விரிதிமான் சாஹாவின் காயம் பெரிதாகி அறுவை சிகிச்சை வரை சென்றது என ஏற்கனவே இருக்கும் நீண்ட புகார் பட்டியலை சுட்டிக் காட்டும் ஐபிஎல் அணிகள் ஐபிஎல் முடியும் அவரை ஆஷிஷ் கௌஷிக்கை தங்கள் அணிகளுக்குள் அனுமதிக்க முடியாது எனவும் கூறி உள்ளன.

விமர்சனம்

விமர்சனம்

மேலும், ஐபிஎல் அணிகளிலேயே உலகத்தரம் வாய்ந்த பிசியோதெரபிஸ்ட்கள் இடம் பெற்று இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர். பிசிசிஐ முடிவுகள் பலவும் விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் நிலையில் இந்த விஷயமும் பிசிசிஐக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 : IPL teams oppose to allow BCCI physiotherapist in their teams during IPL. As Australia test series will begin immediately after the IPL, BCCI want to track the Indian team players fitness.
Story first published: Sunday, August 9, 2020, 19:13 [IST]
Other articles published on Aug 9, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X