கேப்டன் பதவியை பறிச்சதே இதுக்குத்தானா? தினேஷ் கார்த்திக் சேப்டர் குளோஸ்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் பாதியில் தன் கேப்டன் பதவியை தாரை வார்த்தார் தினேஷ் கார்த்திக்.

அதைத் தொடர்ந்து அவரை அணியில் இருந்து நீக்க உள்ளதாக ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பரபரப்பு கிளம்பி வருகிறது.

அடுத்த சில போட்டிகளிலோ அல்லது இந்த சீசனின் முடிவிலோ அவர் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.

டீமை விட்டு தூக்கும் அளவுக்கு எந்த தப்பும் செய்யவில்லை.. காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்.. கசிந்த தகவல்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2018இல் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் அந்த அணி பிளே-ஆஃப் சென்றது. அடுத்த சீசனில் கொல்கத்தா அணி பிளே-ஆஃப் செல்லவில்லை. மேலும் அந்த சீசனில் அணியில் கோஷ்டி மோதல் வெடித்தது.

முன்பே நீக்கி இருக்கலாம்

முன்பே நீக்கி இருக்கலாம்

2019 சீசனில் முடிவில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என கருதப்பட்டது. ஆனால், பயிற்சியாளரை மட்டும் மாற்றியது கொல்கத்தா அணி நிர்வாகம். இயான் மார்கன், பாட் கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இயான் மார்கன் தந்த அழுத்தம்

இயான் மார்கன் தந்த அழுத்தம்

இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த இயான் மார்கன் அணியில் இருந்தும் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லையா? என தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்ததால் தினேஷ் கார்த்திக் 2020 ஐபிஎல் தொடரின் துவக்கம் முதல் கடும் அழுத்தத்தில் இருந்தார்.

நல்ல கேப்டன்சி

நல்ல கேப்டன்சி

தினேஷ் கார்த்திக் குறித்து விமர்சனம் எழுந்தாலும் சில போட்டிகளில் அவர் எடுத்த சில முடிவுகள் நல்ல பலனைக் கொடுத்தது. ஆனாலும், அணியின் தோல்விகள் அவரது கேப்டன்சிக்கு அச்சுறுத்தலாக மாறியது. மேலும், அவரது தனிப்பட்ட பேட்டிங்கும் மோசமாக இருந்தது.

பதவி பறிப்பு

பதவி பறிப்பு

இந்த நிலையில், திடீரென தன் கேப்டன் பதவியை இயான் மார்கனுக்கு விட்டுக் கொடுத்தார் தினேஷ் கார்த்திக். அதன் பின்னணியில் அணி நிர்வாகம் அவரை பதவியை விட்டு விலகுமாறு கூறியதாக பேசப்பட்டது. பதவி பறிபோன நிலையில் அபர் அணியில் ஒரு வீரராக தொடர்ந்தார்.

மோசமான பார்ம்

மோசமான பார்ம்

எனினும், பேட்டிங்கில் அவரது பார்ம் மோசமாகவே உள்ளது. இந்த சீசனில் அவர் 121 பந்துகளில் 148 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட், ரன் குவிக்கும் விகிதம் என எல்லாமே மோசமாக உள்ளது. அணியில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டிம் செய்பர்ட் இருக்கிறார்.

நீக்கப்படுவார்

நீக்கப்படுவார்

கொல்கத்தா அணியில் பல வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில போட்டிகளில் அவர் நீக்கப்படலாம் அல்லது இந்த சீசனின் முடிவில் ஒட்டு மொத்தமாக கொல்கத்தா அணியில் இருந்தே அவர் வெளியேற்றப்படலாம்.

இனி வாய்ப்பு கிடைக்குமா?

இனி வாய்ப்பு கிடைக்குமா?

தினேஷ் கார்த்திக், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டால் வேறு ஐபிஎல் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பதும் சந்தேகமே. அவர் விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங் மிக மோசமாக உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 KKR vs KXIP : Dinesh Karthik may lose his spot in KKR
Story first published: Monday, October 26, 2020, 19:22 [IST]
Other articles published on Oct 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X