For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 டக் அவுட்.. 2 செஞ்சுரி.. தாறுமாறான ஐபிஎல் ரெக்கார்டு.. மலைக்க வைத்த சீனியர் வீரர்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில் தவான் 78 ரன்கள் குவித்தார்.

அத்துடன் இந்த சீசனில் 600 ரன்களுக்கும் மேல் குவித்து மிரள வைக்கும் சாதனை செய்துள்ளார்.

பார்முக்கு வந்த தவான்.. வெறியாட்டம் ஆடிய வெ.இண்டீஸ் வீரர் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பதற வைத்த டெல்லிபார்முக்கு வந்த தவான்.. வெறியாட்டம் ஆடிய வெ.இண்டீஸ் வீரர் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பதற வைத்த டெல்லி

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான் 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் ஒவ்வொரு போட்டியிலும் ரன் எடுத்தாலும் மிகவும் நிதான ஆட்டம் ஆடி வந்தார். அவரால் மற்ற டெல்லி வீரர்களுக்கு பேட்டிங்கில் அழுத்தம் ஏற்பட்டு வந்தது. எனினும், பாதி தொடரில் தன் ஆட்டத்தை மாற்றி, அதிரடியாக ரன் குவித்தார்.

செஞ்சுரி, டக் அவுட்கள்

செஞ்சுரி, டக் அவுட்கள்

இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்து மிரள வைத்த தவான், அடுத்து இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெறுப்பேற்றினார். ஒரே சீசனில் நான்கு முறை டக் அவுட் ஆனார். ஆனாலும், துவக்கத்தில் ஆட்டமிழக்காமல் நின்றால், பெரிய அளவில் ரன் குவித்து வந்தார்.

603 ரன்

603 ரன்

இந்த சீசனில் இரண்டு சதம், நான்கு அரைசதம் அடித்து 603 ரன்கள் குவித்துள்ளார் தவான். டெல்லி அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் 78 ரன்கள் குவித்த அவர் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார். இதுவே தவான் ஒரு ஐபிஎல் சீசனில் எடுக்கும் அதிகபட்ச ரன்கள்.

பிளே-ஆஃப்பில் சாதனை

பிளே-ஆஃப்பில் சாதனை

மேலும், இதுவரை 14 பிளே-ஆஃப் இன்னிங்க்ஸில் தவான் 194 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 34 மட்டுமே. அந்த சோகத்தை தீர்த்த தவான் இந்த முறை 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அசத்தினார்.

இரண்டாவது

இரண்டாவது

இந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுலுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். கேஎல் ராகுல் 14 போட்டிகளில் 670 ரன்கள் குவித்துள்ளார். தவான் 16 போட்டிகளில் 603 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 600 ரன்களை கடந்துள்ளார் தவான்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

இந்தப் போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்தது. தவான் 78, ஹெட்மயர் 42, ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் குவித்தனர். ஹைதராபாத் அணி பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டது. தவான் ஆட்டத்தால் இந்தப் போட்டியில் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியது.

Story first published: Sunday, November 8, 2020, 23:06 [IST]
Other articles published on Nov 8, 2020
English summary
IPL 2020 Qualifier 2 DC vs SRH : Shikar Dhawan scored 600 runs in single IPL season for the first time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X