For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2020 ஐபிஎல் நடக்க உள்ள 3 கிரிக்கெட் மைதானங்கள்.. சிஎஸ்கே, பஞ்சாப் குஷி.. வெளியான தகவல்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நடைபெற உள்ளது.

Recommended Video

IPL 2020 : UAE Cricket grounds list

தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் குறித்து அதிகம் அறியாத ரசிகர்கள் அது குறித்து இணையத்தில் தேடி வருகிறார்கள்.

அந்த நாட்டில் மூன்று சர்வதேச தரத்திலான மைதானங்கள் உள்ளன. அதில் 2014ஆம் ஆண்டு 20 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன.

அதெல்லாம் நீங்க பேசக் கூடாது.. செமயாக வாங்கிக் கட்டிக் கொண்ட பாக் வீரர்.. ரசிகர்கள் சரமாரி விளாசல்!அதெல்லாம் நீங்க பேசக் கூடாது.. செமயாக வாங்கிக் கட்டிக் கொண்ட பாக் வீரர்.. ரசிகர்கள் சரமாரி விளாசல்!

விவாதம்

விவாதம்

அந்த 20 போட்டிகளின் அடிப்படையில் எந்த அணிக்கு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பது சாதகம், எந்த அணிக்கு பாதகம் என்ற விவாதமும் துவங்கி உள்ளது. முதலில் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ள அந்த மூன்று சர்வதேச மைதானங்கள் குறித்து பார்க்கலாம்.

மைதானங்கள்

மைதானங்கள்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், அபுதாபியில் உள்ள சேக் சையத் கிரிக்கெட் மைதானம், ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் அமைப்பு மைதானம் ஆகிய மூன்றும் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சர்வதேச மைதானங்கள்.

ரசிகர்கள் வர வாய்ப்பில்லை

ரசிகர்கள் வர வாய்ப்பில்லை

இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் நேரில் வர வாய்ப்பில்லை என்றாலும், இந்த மைதானங்களின் இருக்கை எண்ணிக்கையை வைத்து மைதானத்தின் அளவை அறியலாம். துபாய் மைதானத்தின் இருக்கை எண்ணிக்கை 25,000 ஆகும்.

இருக்கை எண்ணிக்கை

இருக்கை எண்ணிக்கை

அபுதாபி மைதானத்தின் இருக்கை எண்ணிக்கை 20,000 மற்றும் ஷார்ஜா மைதானத்தின் இருக்கை எண்ணிக்கை 15,000 ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு அபுதாபியில் 7 ஐபிஎல் போட்டிகள் நடந்தது. துபாயில் 7, ஷார்ஜாவில் 6 போட்டிகள் நடைபெற்றன.

சராசரி ஸ்கோர்

சராசரி ஸ்கோர்

மொத்தம் 20 ஐபிஎல் போட்டிகள் இதுவரை இந்த மூன்று மைதானங்களிலும் நடந்துள்ளன. இந்த மைதானங்கள் மந்தமான பிட்ச்சை கொண்டவை. இங்கே ஒரு டி20 இன்னிங்க்ஸின் சராசரி ஸ்கோர் 151 என்பது குறிப்பிடத்தக்கது. ஷார்ஜாவில் மட்டும் சரசாரி அதிகமாக உள்ளது. அங்கே ஸ்கோர் சராசரி 158 ரன்கள்.

தலைகீழாக உள்ளது

தலைகீழாக உள்ளது

இந்தியாவில் ஐபிஎல் அணிகளின் நிலை எப்படி இருக்கிறதோ அது ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலும் தலைகீழாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர. 2014 ஐபிஎல் தொடரின் செயல்பாட்டை வைத்து வெளியாகி உள்ள புள்ளி விவரம் அதைத் தான் சொல்கிறது.

பஞ்சாப் அட்டகாசம்

பஞ்சாப் அட்டகாசம்

2014இல் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தலா 5 போட்டிகளை அங்கே ஆடின. அதில் ஒரு தோல்வி கூட அடையாமல் ஐந்திலும் வெற்றி பெற்றுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அந்த அணி இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர்களில் இத்தனை வெற்றிகரமாக இருந்ததில்லை.

சிஎஸ்கே அணியின் வெற்றிகள்

சிஎஸ்கே அணியின் வெற்றிகள்

சிஎஸ்கே அணி ஐந்தில் நான்கு வெற்றிகளை பெற்று, தன் இயல்பான பாணியில் இருக்கிறது. நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. மற்ற ஐந்து அணிகளும் இரண்டு அல்லது மூன்று வெற்றிகளை பெற்றுள்ளன.

யாருக்கு சாதகம்?

யாருக்கு சாதகம்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடப்பது சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சாதகமாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் ஆருடம் கூறத் துவங்கி விட்டனர். அங்கே சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

Story first published: Friday, July 24, 2020, 20:28 [IST]
Other articles published on Jul 24, 2020
English summary
Here is the list of UAE Cricket grounds list : Dubai, Abu Dhabi, Sharjah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X