For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2022 - சிஎஸ்கே வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸ்.. தோற்றாலும் மீசைய முறுக்கு தருணம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே அணி 9 வது இடத்தை மட்டுமே பிடித்தது.

இதில் சிஎஸ்கே ஒரு அணியாக ஒருங்கிணைந்து விளையாட வில்லை என்றாலும், பேட்டிங்கில் சில போட்டிகளில் வீரர்கள் தனி ஆளாக நின்று ஜொலித்தனர்.

இந்த நிலையில், நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆடிய டாப் 5 இன்னிங்ஸ் குறித்து தற்போது பார்க்கலாம்.

பெரிதாகும் ஐபிஎல் - 2வது புதிய அணியை வாங்கும் சிஎஸ்கே.. நடப்பு ஆண்டில் ஒப்பந்தம்பெரிதாகும் ஐபிஎல் - 2வது புதிய அணியை வாங்கும் சிஎஸ்கே.. நடப்பு ஆண்டில் ஒப்பந்தம்

மொயின் அலி

மொயின் அலி

ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்த்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. அப்போது சென்னை அணி 2 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. அப்போது களத்துக்கு வந்த மொயின் அலி, ருத்ரதாண்டவம் ஆடினார். 57 பந்துகளில் 93 ரன்களை மொயின் அலி விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். குறிப்பாக டிரெண்ட் பவுல்ட் ஓவரில் 26 ரன்கள் விளாசினார்.

ருத்துராஜ்

ருத்துராஜ்

நடப்பு சீசனில் ஒரு இன்னிங்சில் சிஎஸ்கே வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற பெருமையை ருத்துராஜ் பெற்றார். ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருத்துராஜ் 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் சதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு கான்வேயுடன் சேர்ந்து 182 ரன்கள் சேர்த்தார் ருத்துராஜ். இதன் மூலம் சிஎஸ்கே அணி 202 ரன்கள் சேர்த்து 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

சிவம் துபே

சிவம் துபே

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் 12வது லீக் ஆட்டத்தில் சிவம் துபே தனி ஆளாக நின்று 46 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். இதில் ஸ்ட்ரைக் ரேட் 206. இதில் சிவம் துபே 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 216 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டிவோன் கான்வே

டிவோன் கான்வே

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் அடித்தார். இதில் கான்வே 7 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் விளாசினார். இதன் மூலம் தொடக்க விக்கெட்டுக்கு ருத்துராஜ் உடன் கான்வே 110 ரன்கள் சேர்த்தார். இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Recommended Video

Women’s IPL-க்கு Plan போடும் BCCI! 2023-ல் Inagural | Aanee's Appeal | #Cricket
தோனி

தோனி

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த இன்னிங்ஸ் என்றால் மும்பைக்கு எதிராக தோனி ஆடிய இந்த இன்னிங்சை சொல்லலாம். கடைசி 4 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டது. தோனி 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 13 பந்துகளில் 28 ரன்கள் அடித்தாலும், நெருக்கடியான கட்டத்தில் விளையாடி அணியின் வெற்றிக்கு தேடி தந்தார்.

Story first published: Wednesday, June 1, 2022, 19:09 [IST]
Other articles published on Jun 1, 2022
English summary
IPL 2022 – CSK batsman Most top 5 innings in this season ஐபிஎல் 2022 - சிஎஸ்கே வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸ்.. தோற்றாலும் மீசைய முறுக்கு தருணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X