For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணியில் மாற்றம்.. குஜராத்தை எதிர்கொள்ள செம பிளான்.. ஹர்திக்கை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சி

புனே: ஐபிஎல் தொடரில் ஞாயிற்றுகிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியும் மோதுகின்றன.

சிஎஸ்கே இதுவரை விளையாடிய 5 போட்டியில், 4 போட்டியில் தோல்வி அடைந்து ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

கடைசி 6 பந்துகள்.. பலனிக்காமல் போன பொல்லார்ட்-ன் மேஜிக்.. ராஜஸ்தான் அணியிடம் வீழ்ந்த மும்பை அணி! கடைசி 6 பந்துகள்.. பலனிக்காமல் போன பொல்லார்ட்-ன் மேஜிக்.. ராஜஸ்தான் அணியிடம் வீழ்ந்த மும்பை அணி!

இதனால், நாளைய ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்காக தோனி ஒரு சிறப்பு திட்டத்தை வைத்துள்ளார்.

கிறிஸ் ஜார்டன்

கிறிஸ் ஜார்டன்

சிஎஸ்கே அணி பெங்களூருவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும், பிளேயிங் லெவனில் ஒரு குறை இருந்தது. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் ஜார்டனை அணியில் சேர்த்து, அவர் ரன்களை வாரி வழங்கினார். கடந்த போட்டியில் கூட அவர் வீசிய முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். இதனால் அவரை பயன்படுத்தாமல் சிஎஸ்கே வேறு வீரர்களை வைத்து சமாளித்தது.

பிரிட்டோரியஸ்

பிரிட்டோரியஸ்

வேறு வழியில்லாமல் அவருக்கு வழங்கப்பட்ட 2வது ஓவரில் ஜார்டன் 9 ரன்களை வழங்கினார்.இதனால் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் ஜார்டன் நீக்கப்பட்டு, பிரிட்டோரியஸ் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இன்று புனேவில் நடந்த பயிற்சி முகாமில் கூட , பிரிட்டோரியஸ் அதிக நேரம் பந்துவீசியும், பேட்டிங் செய்தும் பயிற்சி மேற்கொண்டார்.

சிறப்பு திட்டம்

சிறப்பு திட்டம்

இந்த நிலையில், குஜராத் அணியின் பேட்டிங் பவர் ஹவுசாக ஹர்திக் பாண்டியா உள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு கால் அருகே ஃபுல் லேங்தில் பந்துவீசினால், அதனை அவர் சிக்சருக்கு விரட்டுவார். இதனை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை சமாளிக்க சிஎஸ்கே ஒரு திட்டம் போட்டுள்ளது. அதற்கான பயிற்சியையும் ஈடுபட்டனர்.

சமாளிக்குமா சிஎஸ்கே

சமாளிக்குமா சிஎஸ்கே

அதாவது ஹர்திக் பாண்டியாவுக்கு வலது புறத்தில் ஓயிடாக யாக்கர் லெங்தில் பந்துவீசினால், அவரால் அடிக்க முடியாது. அதனை கவர் ஷாட் ஆடி ரன்கள் சேர்க்க முடியும். இதனால் இன்றைய பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஓயிடு யாக்கரை வீசி பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த திட்டம் கைக்கொடுக்குமா என்று நாளை தெரிந்துவிடும்.

Story first published: Saturday, April 16, 2022, 21:10 [IST]
Other articles published on Apr 16, 2022
English summary
IPL 2022- CSK set up Plan to tackle Hardik Pandya for Sunday game சிஎஸ்கே அணியில் மாற்றம்.. குஜராத்தை எதிர்கொள்ள செம பிளான்.. ஹர்திக்கை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X