For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாத்தி கம்மிங்...சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வீடியோ வெளியிட்ட மொயின் அலி

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது.

சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், இங்கிலாந்தை சேர்ந்த மொயின் அலி.

மொயின் அலி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விசாவுக்கு விண்ணப்பித்தார்.

விசா சர்ச்சை

விசா சர்ச்சை

பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஒரிரு நாளில் எவ்வித கேள்விகளும் இன்றி விசா கிடைத்துவிடும். ஆனால் மொயின் அலிக்கு 20 நாட்கள் ஆகியும் விசா கிடைக்கவில்லை. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. அரசியல் காரணங்களுக்காக தான் மொயின் அலிக்கு விசா வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

கோரிக்கை

கோரிக்கை

மொயின் அலி இந்தியாவுக்கு அடிக்கடி வந்து விளையாடும் கிரிக்கெட் வீரர், அவருக்கு விசா கிடைக்காதது மோசம் என்று அவரது தந்தை முனிர் அலி குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து, சிஎஸ்கே அணி நிர்வாகம், பிசிசிஐயிடம் புகார் அளித்து, விசா கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

மும்பை புறப்பாடு

மும்பை புறப்பாடு

இதனையடுத்து பிசிசிஐ நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக மொயின் அலிக்கு இந்தியா வர விசா கிடைத்துள்ளது. இதனை வீடியோ மூலம் வெளியிட்ட மொயின் அலி, ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளமாகவும், அடுத்த விமானத்திலேயே மும்பை வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

Recommended Video

Moeen Ali வருவதிலும் சிக்கல்.. KKR-க்கு எதிரான போட்டியில் என்ன செய்ய போகிறது CSK?
குவாரண்டைன்

குவாரண்டைன்

எனினும் மொயின் அலி இன்றே மும்பை வந்தாலும், 3 நாட்கள் கண்டிப்பாக குவாரண்டையின் இருந்து பிறகு தான் அணியுடன் சேர வேண்டும். இதனால் வரும் 26ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மொயின் அலி பங்கேற்க மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Story first published: Thursday, March 24, 2022, 9:53 [IST]
Other articles published on Mar 24, 2022
English summary
IPL 2022- CSK Star Batsman Moeen ali granted visa மொயின் அலிக்கு விசா கிடைத்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வீடியோ வெளியிட்ட மொயின் அலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X