For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜேசன் ராய் விலகலில் தோனியின் ப்ளான்.. முன்பே போட்டு வைத்த திட்டம்.. சிஎஸ்கேவால் குழப்பத்தில் ஹர்திக்

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜேசன் ராய்-ன் விவகாரம் தெரிந்ததால் தான் தோனி சைலண்டாக இருந்துள்ளார் எனத்தெரிகிறது.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி வரும் மே 29ம் தேதி நடைபெறும்.

போட்டி தொடங்க இன்னும் 4 வாரங்கள் கூட இல்லாத சூழலில் தான் ஜேசன் ராய் ஐபிஎல்-ல் இருந்து விலகினார்.

ஹர்திக் தலையில் பெரும் இடி.. ஐபிஎல்-ல் இருந்து ஜேசன் ராய் விலகல்..ஓப்பனிங்கிற்கே ஆள் இல்லாத பரிதாபம்ஹர்திக் தலையில் பெரும் இடி.. ஐபிஎல்-ல் இருந்து ஜேசன் ராய் விலகல்..ஓப்பனிங்கிற்கே ஆள் இல்லாத பரிதாபம்

ராய் விலகல்

ராய் விலகல்

இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான ஜேசன் ராய் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அவரை வாங்க பெரும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிஞ்சியது ஏமாற்றம் தான். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜாராத் டைட்டான்ஸ் அணி அவரை அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு வாங்கிக்கொண்டது.

ரசிகர்களின் ஆட்டம்

ரசிகர்களின் ஆட்டம்

இவ்வளவு பெரிய வீரர் வெறும் ரூ.2 கோடிக்கு கிடைத்தது பெரிய விஷயம் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அவர் ஓப்பனிங்காக வைத்துதான் வேறு எந்த ஓப்பனிங் வீரர் மீதும் குஜராத் அணி ஆர்வம் காட்டாமல் இருந்தது. மேலும் இந்த குஷியில் ரசிகர்கள் சிஎஸ்கே அணியையும் சீண்டி வந்தனர்.

சிஎஸ்கே மீது விமர்சனம்

சிஎஸ்கே மீது விமர்சனம்

மெகா ஏலத்தில் டூப்ளசிஸை இழந்த சென்னை அணிக்கு ஒரு அயல்நாட்டு ஓப்பனிங் வீரர் தேவைப்பட்டார். சரியாக அந்த நேரத்தில் தான் ஜேசன் ராய் மிக குறைந்த விலையில் ஏலம் விடப்பட்டார். ஆனால் சிஎஸ்கே அவரின் மீது துளிக்கூட ஆர்வம் காட்டவில்லை. அனுபவ வீரரின் தேவை இருந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்தது. இதற்கு சிஎஸ்கே மீது எதிர்புகளும், விமர்சனங்களும் குவிந்தன.

தோனியின் மாஸ்டர் ப்ளான்

தோனியின் மாஸ்டர் ப்ளான்

ஆனால் இங்கிலாந்து வீரர்கள் பலரும் மெகா ஏலத்திற்கு முன்பே ஐபிஎல்-ல் பங்கேற்போவதில்லை என தெரிவித்திருந்தனர். மேலும் சில வீரர்கள் வெளியேறலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனை நன்கு உணர்ந்து வைத்திருந்த தோனி, அவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி வெளியேறிவிடலாம் என்பதால் ஒரு ரூபாய் கூட ஜேசன் ராய் மீது செலவு செய்யாதீர்கள் எனக்கூறியுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தோனி மீண்டும் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

Story first published: Tuesday, March 1, 2022, 11:28 [IST]
Other articles published on Mar 1, 2022
English summary
Dhoni's master plan in mega auction is revealed, Jason roy pull out of IPL 2022 is already in plan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X