For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தேவைதானா.. தெனாவட்டான செயலால் வாங்கிக்கட்டிய ஹர்திக் பாண்ட்யா.. குஜராத் அணி வீரர்களே அதிருப்தி!

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா செய்த ஒரு விஷயத்தால் சக அணி வீரர்களே அதிருப்தியில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரிஸ்க்கே வேண்டாம்பா சாமி.. ஹர்த்திக் பாண்ட்யா அந்தர் பல்டி.. பஞ்சாப்புடனான மோதலில் திடீர் ட்விஸ்ட்! ரிஸ்க்கே வேண்டாம்பா சாமி.. ஹர்த்திக் பாண்ட்யா அந்தர் பல்டி.. பஞ்சாப்புடனான மோதலில் திடீர் ட்விஸ்ட்!

ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

டாஸில் ஹர்திக் பாண்ட்யாவின் முடிவு அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் போட்டி நடைபெறும் DY பாட்டில் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 21 டி20 போட்டிகளில் 14 முறை 2வது பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு சற்று இருக்கும். இதனால் பவுலர்கள் நினைத்த லைனில் பந்துவீச முடியாது.

குஜராத் அணியின் ஃபார்முலா

குஜராத் அணியின் ஃபார்முலா

குஜராத் அணிக்கும் நடப்பு சீசனில் அதிகப்படியான வெற்றிகள் இலக்கை துரத்தி வந்தது தான். குறிப்பாக கடந்த 2 போட்டிகளிலும் 2வது பேட்டிங் செய்துதான் வென்றது. இப்படி இருக்கையில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பில் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கை தேர்வு செய்தார். இவர் எதற்காக இப்படி செய்தார் என சக வீரர்களுக்கே புரியவில்லை.

தரமான பதிலடி

தரமான பதிலடி

இந்நிலையில் பாண்ட்யாவின் தெனாவட்டிற்கு சரியான பதிலடி கிடைத்துள்ளது. எந்தவித பனிப்பொழிவும் இல்லாததால், பஞ்சாப் கிங்ஸ் அணி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியது. குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாஹா 21 ரன்களுக்கும், சுப்மன் கில் 9 ரன்களுக்கும் நடையை கட்டினர். சீனியர் வீரர்கள் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 1 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 11 ரன்களுக்கும் வெளியேறினர்.

Recommended Video

Virat Kohli-ன் இடத்தை கேட்ட Hardik Pandya.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

கடந்த சில போட்டிகளாக அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த ராகுல் தேவட்டியா - ரஷித் கான் ஜோடியாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தேவட்டியா 11 ரன்களுக்கும், ரஷித் கான் டக் அவுட்டும் ஆகினர். சாய் சுதர்ஷன் மட்டும் 64 ரன்களை அடித்ததால் குஜராத் அணி தப்பியது. 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த களத்தில் இந்த ஸ்கோரை விரட்டுவது சுலபம் தான்.

Story first published: Tuesday, May 3, 2022, 21:37 [IST]
Other articles published on May 3, 2022
English summary
IPL 2022: Hardik pandya's wrong decision makes Gujarat titans in trouble
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X