For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 வயசு பையன் கிட்ட இப்படியா நடந்துக்குறது? சர்ச்சையை ஏற்படுத்திய ஹர்சல் பட்டேல்.. ரசிகர்கள் கண்டனம்

புனே: ஐபிஎல் தொடரின் 39வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானும், பெங்களூரும் மோதிய ஆட்டத்தில், ஹர்சல் பட்டேல் நடந்து கொண்ட விதம், ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IPL 2022: Harshal Patel Refused To Shake Hands with Riyan Parag Creates Controversy | Tamil Oneindia

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை எளிதாக பெங்களுரு துரத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

3 பந்துகளில் 2 விக்கெட்.. நடராஜன் தாருமாறு..வேகத்தால் மிரட்டிய உம்ரான்.. இறுதியில் ரஸில் பட்டாசு3 பந்துகளில் 2 விக்கெட்.. நடராஜன் தாருமாறு..வேகத்தால் மிரட்டிய உம்ரான்.. இறுதியில் ரஸில் பட்டாசு

அந்த அணியோ 115 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த ஆட்டத்திலும் கோலி, மேக்ஸ்வெல், டுபிளஸிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக்கின் ஆட்டத்தால் மட்டும் தான் அந்த அணி வென்றது. பட்லர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 6வது வீரராக களமிறங்கிய ரியான் பராக் 31 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும்.

இருவரும் மோதல்

இருவரும் மோதல்

இதில் ஹர்சல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் ரியான் பராக் 2 சிக்சர் விளாசினார். இதனையடுத்து இன்னிங்ஸ் முடிந்ததும் பெவிலியன் நோக்கி ரியான் பராக் சென்ற நிலையில், ஆர்சிபி வீரர்கள் அவரை வம்பிழுத்தனர். இதனால் கடுப்பான பராக், ஹர்சல் பட்டேலை நோக்கி வேகமாக செல்ல, ஹர்சல் பட்டேலும் ஆக்ரோஷமாக வந்து ஏதோ பேசினார்.

ஹர்சல் மோசமான செயல்

ஹர்சல் மோசமான செயல்

அப்போது, அங்கிருந்த ராயல்ஸ் அணி நிர்வாகி ஹர்சல் பட்டேலை தடுத்து, இருவரையும் அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆட்டம் முடிந்ததும், ராஜஸ்தான் அணி வென்ற நிலையில், இரு அணி வீரர்களும் பரஸ்பரமாக கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, ஹர்சல் பட்டேலிடம் ரியான் பராக் கை கொடுக்க சென்றார்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

ஆனால் ஹர்சல் பட்டேல் திமிராக கையை கொடுக்காமல், ரியான் பராக்கை கடந்து சென்றார். இதனால் ரியான் பராக் அதிர்ச்சி அடைந்தார். 20 வயது இளம் வீரரிடம் ஹர்சல் பட்டேல் நடந்து கொண்ட விதம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஹர்சல் பட்டேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இளம் வயதாக இருந்தாலும் ரியான் பராக், ஸ்போர்ட்மேன்ஷிப்பை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் ஹர்சல் பட்டேல் அதற்கு மதிப்பளிக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

Story first published: Wednesday, April 27, 2022, 12:32 [IST]
Other articles published on Apr 27, 2022
English summary
IPL 2022 – Harshal Patel refused to shake hands with Riyan Parag created controversy20 வயசு பையன் கிட்ட இப்படியா நடந்துக்குறது? சர்ச்சையை ஏற்படுத்திய ஹர்சல் பட்டேல்.. ரசிகர்கள் கண்டனம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X