முடிவுக்கு வருகிறது அஸ்வின் கனவு ? இனி டி20, ஒருநாள் அணியில் இடமில்லை..! அப்படி என்ன தவறு செய்தார்?

அகமதாபாத்: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இனி டி20, ஒருநாள் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் அஸ்வின் தனது உடல் எடையை குறைத்து, உடல் தகுதியை மேம்படுத்தி, தனது பேட்டிங்கில் அதீத கவனம் செலுத்தினார்.

இதன் மூலம், அஸ்வினின் பேட்டிங் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தது. நடப்பு சீசனில் அரைசதம் எல்லாம் பேட்டிங்கில் அஸ்வின் அடித்தார்.

இலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணிஇலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணி

அஸ்வின் செயல்பாடுகள்

அஸ்வின் செயல்பாடுகள்

இதனால், அஸ்வினுக்கு பழைய படி டி20, ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்வின் ஒரு மாயஜால சுழற்பந்துவீச்சாளர். டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளேவிற்கு பிறகு அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர். டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

பந்துவீச்சில் சொதப்பல்

பந்துவீச்சில் சொதப்பல்

ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் அஸ்வினின் பந்துவீச்சு பழைய மாதிரி இல்லையோ என்ற சந்தேகத்தை தந்துள்ளது. 17 போட்டியில் விளையாடியுள்ள அஸ்வின் மொத்தமாகவே 12 விக்கெட்டுகளை தான் எடுத்துள்ளார். சராசரி 41 என்ற அதிகளவில் உள்ளது. நேற்று ராஜஸ்தான் தோல்வி அடைந்ததற்கு பேட்டிங் தான் முழு காரணமாக இருந்தாலும் பந்துவீச்சிலும் சொதப்பலாக அமைந்தது.

ஏமாற்றிய அஸ்வின்

ஏமாற்றிய அஸ்வின்

குறிப்பாக அஸ்வின் நேற்றைய அட்டத்தில் 3 ஓவர் வீசி 30 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்தார். 6 பந்தையும், 6 மாதிரி வீசியதால் பேட்ஸ்மேன்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி ரன்களை வாரி வழங்கினர். இதுவே பழைய அஸ்வினாக இருந்திருந்தால் பேட்ஸ்மேன்கள் அடிக்க முடியாத படி பந்துவீசி இருப்பார்.

Recommended Video

Ashwin-க்கு எதிராக Sai Kishore-ஐ பயன்படுத்திய Hardik Pandya
இந்திய அணியில் இடமில்லை

இந்திய அணியில் இடமில்லை

தற்போது சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், சாய் கிஷோர் என நடப்பு சீசனில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் அஸ்வினுக்கு இனி ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைப்பது மிகவும் சவாலான விசயம். இதனால் இனி அஸ்வின் White ball கிரிக்கெட் ஆட முடியாமல் போகலாம். பேட்டிங்கில் கவனம் செலுத்திய அஸ்வின், பந்துவீச்சில் கோட்டை விட்டதாக ரசிகர்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 – R Ashwin Might not come back to Indian odi, t20 team முடிவுக்கு வருகிறது அஸ்வின் கனவு ? இனி டி20, ஒருநாள் அணியில் இடமில்லை..! அப்படி என்ன தவறு செய்தார்?
Story first published: Monday, May 30, 2022, 17:17 [IST]
Other articles published on May 30, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X