வாங்க பழகலாம்..!! எங்க கிட்டயும் மைதானங்கள் இருக்கு..!! பி.சி.சி.ஐ.க்கு இலங்கை கோரிக்கை..

சென்னை: ஐ.பி.எல். போட்டிகளின் 15வது சீசன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான மெகா ஏலம் பிப்ரவிரி மாதம் நடைபெறுகிறது

IPL 2022-ஐ எங்க நாட்டில் நடத்தலாம்.. BCCI-க்கு கோரிக்கை வைக்கும் Srilanka

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அலை எப்போது முடியம் என்று தெரியவில்லை

இதனால் ஐ.பி.எல். போட்டிகளுக்கு கடந்த ஆண்டை போல் பிரச்சினை வராமல் இருக்க பி.சி.சி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய ஐ.பி.எல். அணிகளுக்கு கெடு விதித்த பி.சி.சி.ஐ..!! அதிர்ச்சியில் அகமதாபாத், லக்னோ அணிகள்..!!புதிய ஐ.பி.எல். அணிகளுக்கு கெடு விதித்த பி.சி.சி.ஐ..!! அதிர்ச்சியில் அகமதாபாத், லக்னோ அணிகள்..!!

மும்பையில் ஐ.பி.எல்

மும்பையில் ஐ.பி.எல்

ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தையும் மும்பையில் நடத்தலாம் என்று பி.சி.சி.ஐ. முடிவு எடுத்தது. மும்பையில் 3 சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இருப்பதால், வீரர்களை போட்டிக்காக ஒரு நகரத்திலிருந்த இன்னொரு நகரத்துக்கு அலைய வைக்காமல் இருக்க பி.சி.சி.ஐ. இந்த யோசனையை எடுத்தது. ஆனால் மும்பையில் கொரோனா தொற்று குறைந்த பாடு இல்லை.

துபாய் திட்டம்

துபாய் திட்டம்

இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டை போல் ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டது. ஆனால் போட்டியை அங்கு நடத்துவதால் வீரர்கள் தங்கும் செலவு, உணவு செலவு போன்றவை இரு மடங்காக உயர்கிறது. இதனால் அணி நிர்வாகத்திற்கு கட்டுப்படி ஆகாது என்பதால் இம்முறை வேறு எங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்தலாம் என பி.சி.சி.ஐ. யோசித்து வருகிறது

தென்னாப்பிரிக்கா அழைப்பு

தென்னாப்பிரிக்கா அழைப்பு

இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு போல் ஐ.பி.எல். போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்தலாமா என்று பி.சி.சி.ஐ. யோசித்து வருகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமையும் மோசமாக இருப்பதால், ஐ.பி.எல். போட்டிகளை நடத்த முழு ஆதரவு தருவதாக பி.சி.சி.ஐ.க்கு அழைப்பு விடுத்தது.

இலங்கை கோரிக்கை

இலங்கை கோரிக்கை

இதனால் கடுப்பான இலங்கை கிரிக்கேட் வாரியம், இந்தியாவின் அருகில் ஒரே நேரக் கோட்டில் இருப்பதால், இங்கு வந்து ஐ.பி.எல். போட்டிகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் சர்வதேச தரத்தில் மைதானங்கள் இருப்பதாகவும், வானிலையும் இந்தியாவை போல இருப்பதால் இலங்கை ஏற்ற இடமாக இருக்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரவித்துள்ளது. தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, ஐ.பி.எல். போட்டியை நடத்தினால், அதற்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 Srilanka cricket board offers to host IPL during covid times. வாங்க பழகலாம்..!! எங்க கிட்டயும் மைதானங்கள் இருக்கு..!! பி.சி.சி.ஐ.க்கு இலங்கை கோரிக்கை..
Story first published: Friday, January 14, 2022, 11:40 [IST]
Other articles published on Jan 14, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X