For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் - புவி லெவன் Vs வில்லியம்சன் லெவன் - ஐதராபாத் அணிக்குள் நடந்த பயிற்சி ஆட்டம்.. வென்றது யார்?

சென்னை: ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended Video

IPL 2022: Team Bhuvi DEFEAT Team Kane in SRH’s first Practice Match | Oneindia Tamil

சென்னையில் முகாமிட்டு இருந்த ஐதராபாத் அணி வீரர்கள், நேற்று தங்களுக்குள் பயிற்சி ஆட்டம் ஒன்று நடத்தினர்.

இதில் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணியை வில்லியம்சன் தலைமை தாங்க, மற்ற அணியை புவனேஸ்வர் குமார் கேப்டனாக பொறுப்பேற்றார்.

8 ஆண்டு காத்திருப்பு.. ஐபிஎல் -க்கு வரும் ஜிம்பாவே புயல்.. கவுதம் கம்பீர் மாஸ்டர் ஸ்ட்ரோக் - விவரம் 8 ஆண்டு காத்திருப்பு.. ஐபிஎல் -க்கு வரும் ஜிம்பாவே புயல்.. கவுதம் கம்பீர் மாஸ்டர் ஸ்ட்ரோக் - விவரம்

வில்லியம்சன்

வில்லியம்சன்

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட, முதலில் வில்லியம்சன் அணி பேட்டிங் செய்தது. கடந்ந நவம்பர் மாதம் ஓய்வில் இருந்த வில்லியம்சன், 4 மாதங்களுக்கு பிறகு களத்துக்கு திரும்பினார். வில்லியம்சன் மற்றும் பிரியாம் கார்க் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர்.

147 ரன்கள்

147 ரன்கள்

10 ஓவர் முடிவில் வில்லியம்சன் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் தான் எடுத்தது. இதனையடுத்து இறுதியில் வாசிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினர். இதில் திரிபாதி 41 ரன்கள் எடுக்க, வில்லியம்சன் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதில் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிரடி தொடக்கம்

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புவனேஸ்வர் குமார் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக சம்ராத் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட முதல் 5 ஓவரிலேயே 51 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் 10 ஓவர் அந்த அணி 94 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தது.

பூரான் அதிரடி

பூரான் அதிரடி

வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் அபாரமாக செயல்பட்டு ரன்களை குவித்தார். 30 பந்துகளில் 45 ரன்கள் பூரான் விளாசினார். இதில் 2 இமாலய சிக்சர்கள் அடங்கும். இதனால் 15வது ஓவரிலேயே புவனேஸ்வர் குமார் அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள்.

Story first published: Tuesday, March 22, 2022, 11:59 [IST]
Other articles published on Mar 22, 2022
English summary
IPL 2022-Sunrisers Hyderabad intra squad match- Nicholas Pooran shines with bat ஐபிஎல் - புவி லெவன் Vs வில்லியம்சன் லெவன் - ஐதராபாத் அணிக்குள் நடந்த பயிற்சி ஆட்டம்.. வென்றது யார்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X