தோனியை சீண்டிய யுவ்ராஜ் சிங்.. இந்திய அணியில் பாரபட்சம் பார்க்கப்படுகிறதா? அடுக்கடுக்கான உதாரணங்கள்

மும்பை: எம்.எஸ்.தோனிக்கு கொடுக்கப்பட்ட ஒரு விஷயம், மற்ற வீரர்களுக்கு கிடைப்பதில்லை என யுவ்ராஜ் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வீரராக ஜொலித்த எம்.எஸ்.தோனி கடந்த 2019ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

அவர் ஓய்வு பெற்ற போதும், அவருக்கான மவுசு இன்னும் ரசிகர்களிடம் குறையவில்லை. ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டம் தனி கவனத்தை பெற்று வருகிறது.

அடப்பாவமே.. ஜாம்பவான்கள் ஆடிய SDAT மைதானத்திற்கு இந்த நிலைமையா.. டென்னிஸ் வீரர்கள் மனவேதனை- போட்டோஸ்அடப்பாவமே.. ஜாம்பவான்கள் ஆடிய SDAT மைதானத்திற்கு இந்த நிலைமையா.. டென்னிஸ் வீரர்கள் மனவேதனை- போட்டோஸ்

தோனியின் கெத்து

தோனியின் கெத்து

சமீபத்தில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் பதவியேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது. இதனையடுத்து தோனி குறித்து ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். மேலும் இந்தாண்டும் அவர் நிச்சயம் ப்ளே ஆஃப் அழைத்துச் செல்வார் எனவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

யுவ்ராஜ் கருத்து

யுவ்ராஜ் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து யுவ்ராஜ் சிங் பேசியுள்ளார். அதில், தோனிக்கு அதிகப்படியான சப்போர்ட் உள்ளது. அவரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் எப்படி முடிந்தது பாருங்கள். ஓய்வு முன்னர் 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாத தோனிக்கு விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிக ஆதரவு கொடுத்தனர். இதனால் மிகச்சிறப்பாக தனது பயணத்தை முடித்தார்.

சிறந்த வீரர்களுக்கு ஏமாற்றம்

சிறந்த வீரர்களுக்கு ஏமாற்றம்

ஆனால் மற்றவர்களுக்கு அது கிடைக்கவில்லை. பெரும் ஜாம்பவான்களான, ஹர்பஜன் சிங், விவிஎஸ் லக்‌ஷ்மண், கவுதம் கம்பீர் உள்ளிட்டோருக்கு எந்தவித ஆதரவுமே கிடைக்கவில்லை. தலைக்கு மேல் கத்தி என்ற சூழல் உள்ள போது, எந்த வீரரால் தான் சிறப்பாக விளையாட முடியும். 2011ம் ஆண்டுக்கு பிறகு பல வீரர்கள் இதுபோன்று பாதிப்படைந்துள்ளனர்.

Recommended Video

IPL 2022: 6th Weekஐ Entertain ஆக்க கூடிய Matches | CSK vs RCB | OneIndia Tamil
பிசிசிஐ-க்கு கோரிக்கை

பிசிசிஐ-க்கு கோரிக்கை

யுவ்ராஜ் சிங் கூறியது உண்மை போன்று தான் ரசிகர்களும் நினைக்கின்றனர். ஐபிஎல்-ல் கூட கடந்த 2 ஆண்டுகளாக தோனி மோசமான ஃபார்மில் இருந்தார். எனினும் அது எதுவுமே கண்டுக்கொள்ளப்படாமல் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதுபோன்ற ஆதரவை அனைவருக்குமே பிசிசிஐ கொடுத்தால் சிறப்பாக விளையாடுவார்கள் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: Yuvraj singh takes a dig on MS Dhoni about team india chances
Story first published: Tuesday, May 3, 2022, 17:29 [IST]
Other articles published on May 3, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X