For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2023 - சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? மினி ஏலத்திற்கு பின் பலம், பலவீனம் என்ன?

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமான வீரர்களை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 25 வீரர்களையும் சிஎஸ்கே எடுத்து இருக்கிறது. இதில் பிராவோக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்திருக்கிறது.

இந்த நிலையில் மினி ஏலத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொரறுத்தவரை தற்போது மூன்று தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள்.ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் திவோன் கான்வே ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாட வாய்ப்பு இருக்கிறது.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

எனினும் தற்போது பென் ஸ்டோக்ஸ் அணியில் தேர்வு செய்து இருப்பதால் அவரை காண்வேக்கு பதில் களம் இறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் ஓப்பனிங் தான் ஸ்டோக்ஸ் இறங்கி விளையாடி இருக்கிறார். ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக இறங்குவதன் மூலம் சென்னை அணிக்கு இடது கை வலது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேஷன் ஏற்படும்.

நடுவரிசை

நடுவரிசை

மூன்றாவது வீரராக மொயின் அலி விளையாடுவார். நான்காவது வீரராக அம்பத்தி ராயுடு களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனினும் எதிர்காலத்தில் அந்த இடத்தை சாயிக் ரசிதுக்கு சிஎஸ்கே வழங்கலாம். ஐந்தாவது வீரராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், ஆறாவது வீரராக கேப்டன் தோனியும் களமிறங்க கூடும். ஆல்ரவுண்டர் சிவம் துபே 7வது இடத்தில் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

எட்டாவது வீரராக தீபக்சாகரும் ஒன்பதாவது வீரராக ஆல்ரவுண்டர் ஹங்கர்கேகரும் விளையாட சிஎஸ்கே வாய்ப்பு தரலாம். பத்தாவது வீரராக கெயில் ஜெமிசன் அல்லது மதிஷா பதிரானா ஆகியோருக்கு சிஎஸ்கே வாய்ப்பு கொடுக்கலாம். பதினொன்றாம் வீரராக சுழற் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர தென்னாப்பிரிக்கா வீரர் பிரிட்டோரியஸ் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தீஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி ஆகியோர் விளையாட சிஎஸ்கே சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கலாம்.

சிஎஸ்கே பலம்

சிஎஸ்கே பலம்

சென்னை அணியின் பலம் அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளது தான். சென்னை ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதில் மொயின் அலி, ஜடேஜா மகிஷ் தீக்சனா ஆகியோர் கூட்டணி அமைத்து பந்து வீசினால் நிச்சயம் சிஎஸ்கே அணியை வீழ்த்துவது கடினம். பென்ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியின் பலத்தை மேலும் அதிகரிப்பார். எனினும் அவருடைய பந்து வீச்சு எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பது சிறிது சந்தேகமே.

சிஎஸ்கே பிரச்சினை

சிஎஸ்கே பிரச்சினை

தொடக்க வீரராக பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினால் பிரச்சனை இல்லை .எனினும் பொறுமை காத்து அவர் விளையாடினால் தொடக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சிக்கல் ஏற்படும். இதேபோன்று அனுபவம் வாய்ந்த இந்திய வேக பந்துவீச்சாளர் இல்லாததும் சிஎஸ்கே அணிக்கு பிரச்சினை கொடுக்கலாம்.

பலவீனம்

பலவீனம்

இதனால் தீபக்சாகருடன் இணைந்து ஹங்கர்கேகர், முகேஷ் சௌத்ரி, திஷ்பாண்டே ஆகியோர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதன் பொருத்தே சிஎஸ்கே யின் பலவீனம் சரி செய்யப்படும். தோனிக்கும் வயது ஆகிவிட்டதால் அவரும் தன்னுடைய பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள சிவம் துபே பேட்டிங்கில் நன்றாக விளையாடினாலும் பந்து வீச்சு எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாதது பலவீனமாக கருதப்படுகின்றன்.

Story first published: Saturday, December 24, 2022, 6:45 [IST]
Other articles published on Dec 24, 2022
English summary
IPL 2023 - CSK Playing xi - strength and weakness in csk team ஐபிஎல் 2023 - சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? மினி ஏலத்திற்கு பின் பலம், பலவீனம் என்ன?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X