நான் பாட்டுக்குப் போறேன்.. என் பாட்டுக்கு விளையாடுறேன்.. சொல்கிறார் மேக்ஸ்வெல்!

By Sutha

டெல்லி: நான் விளையாடச் செல்லும்போது எந்தத் திட்டமும் என்னிடம் இருப்பதில்லை. என் விளையாட்டை நான் அனுபவித்து ஆடுகிறேன் என்று கூறுகிறார் பார்க்கப் பச்சைக் குழந்தை போல இருந்து கொண்டு எதிரணி பந்து வீச்சாளர்களை தனது பேட்டால் பந்தாடி வரும் கிளன் மேக்ஸ்வெல்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வந்த நேரம் செமையாக இருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் கிடந்த அந்த அணிக்கு வராது வந்த மாமணியாக கிளன் மேக்ஸ்வெல் கிடைத்துள்ளார்.

மனிதர் வருகிற பந்தையெல்லாம் பிரித்து மேய்வதால் பஞ்சாப் அணி செமத்தியாக ரன் குவிக்கிறது. ஜோராக வெற்றிகளையும் எடுக்கிறது. எதிரணி பந்து வீச்சாளர்கள்தான் பாவம் நொந்து அந்து போகின்றனர்.

இந்த நிலையில் தான் படு ஜாலியாகத்தான் ஆடுவதாக தனது டிரேட் மார்க் வெள்ளந்தி சிரிப்புடன் கூறுகிறார் மேக்ஸ்வெல். இதுதொடர்பாக மேக்ஸ்வெல் கொடுத்துள்ள பேட்டியிலிருந்து....

நான் ரொம்ப ஜாலி டைப் பைஸ்

நான் ரொம்ப ஜாலி டைப் பைஸ்

நான் எப்பவுமே டென்ஷன் ஆக மாட்டேன். வேடிக்கையான ஆள். ஜாலியாகத்தான் விளையாடுவன். பெரிய ஷாட்களைக் கூட கேஷுவலாகத்தான் செய்கிறேன்.

செம ஜாலி போங்கோ

செம ஜாலி போங்கோ

நானும், டேவிட் மில்லரும் சேர்ந்து சென்னைக்கு எதிரான போட்டியின்போது மிகப் பெரிய அளவில் ரன் குவித்தது ஜாலியாக இருக்கிறது. அது வேடிக்கையான அனுபவம்..

அலட்டிக்கவே மாட்டேன்

அலட்டிக்கவே மாட்டேன்

எப்போதுமே நான் கேஷுவலாகத்தான் ஆடுவேன். டென்ஷனே ஆக மாட்டேன். அதிலும் மில்லருடன் இணைந்து ஆடும்போது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அனுபவித்து விளையாடுகிறோம். நிறையப் பேசுவோம். என்னை விட ஜாலியான பார்ட்டி மில்லர். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் சிக்ஸர்களை விரட்டினோம்.. ரொம்ப வேடிக்கையாக இருந்தது.

அடிச்சேன்.. போச்சு..நொறுக்க ஆரம்பிச்சுட்டேன்

அடிச்சேன்.. போச்சு..நொறுக்க ஆரம்பிச்சுட்டேன்

முதலில் ஆடுகளம் 2வது பேட்டிங்குக்குத்தான் சாதகமாக இருக்கும என்று தோன்றியது. இருந்தாலும் அடித்துப் பார்த்தேன்.. நன்றாக வந்தது. பிறகு நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே.. நொறுக்க ஆரம்பிச்சுட்டேன்.

அட அது கிடக்குது விடுங்க..

அட அது கிடக்குது விடுங்க..

சதம் வரை நெருங்கி வந்தும் சதம் போட முடியாமல் போனதற்காக நான் கவலைப்படவில்லை. அது வரும்போது வரட்டும். எனது அணி வெல்கிறது. அதுதான் எனக்கு முக்கியம்.

இன்னும் நல்லா விளையாடனும்...

இன்னும் நல்லா விளையாடனும்...

இன்னும் நன்றாக விளையாடனும்.. அதுதான் எனது இப்போதைய ஆசை.. என்று கூறி முடித்தார் மேக்ஸ்வெல்...

இன்னும் நல்லா விளையாடனுமா.. ஏம்ப்பா உனக்கு மனசுல ஈரமே இல்லையா.. இது எதிரணி பவுலர்களின் 'மைன்ட் மற்றும் மவுத் வாய்ஸ்' என்று தனியாகக் கூறத் தேவையே இல்லை...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
His name is sending shivers of chill across bowling attacks in the Indian Premier League 2014 but Kings XI Punjab batsman Glenn Maxwell cannot care less and said he was having fun, hitting the big shots out of the ground after his brutal 38-ball 90 destroyed Chennai Super Kings in Cuttack.
Story first published: Thursday, May 8, 2014, 14:31 [IST]
Other articles published on May 8, 2014
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more