For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 7: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கோஹ்லி, கெய்ல், டிவில்லியர்ஸ் நீடிப்பு

By Mathi

பெங்களூர்: 7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் கோஹ்லி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெறுகிறது.

இருப்பினும் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை இன்று அணி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதனடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி உள்ளிட்ட 5 பேர் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

இந் நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.

கோஹ்லி, கெய்ல், டிவில்லியர்ஸ்

கோஹ்லி, கெய்ல், டிவில்லியர்ஸ்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் கோஹ்லி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோரை தக்க வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

இவர்களுக்கு ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி சம்பளமாக கிடைக்கும்.

பயிற்சியாளராக வெட்டோரி

பயிற்சியாளராக வெட்டோரி

பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

டொனால்டு

டொனால்டு

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆலன் டொனால்டு பந்து வீச்சு பயிற்சியாளராகவும், டிரென்ட் உட்ல் பேட்டிங், பீல்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார் என்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அறிவித்துள்ளது.

Story first published: Friday, January 10, 2014, 15:04 [IST]
Other articles published on Jan 10, 2014
English summary
Royal Challengers Bangalore on Thursday retained their three key players – skipper Virat Kohli, Chris Gayle and AB de Villiers ahead of the upcoming 2014 IPL auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X