For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் சென்னையும் , மும்பையும் போட்டி போட்ட 4 வீரர்கள்..! தோனியை சிஎஸ்கே மீட்ட கதை..!

பெங்களூரு: ஐ.பி.எல். ஏலத்தில் சிறப்பாக அணிகளை தேர்வு செய்து கோப்பைகளை அதிக முறை வென்ற அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தான்.

Recommended Video

IPL Auction 2022: 5 Indian Spinners Can Earn Big Money In Bidding | OneIndia Tamil

இந்த நிலையில், ஏலத்தில் இரு அணிகளும் வீரர்களை பிடிக்க கடுமையாக போட்டி போட்ட வரலாறும் உண்டு.

இன்னும் 6 ரன்கள் தான்.. விராட் கோலி படைக்கப்போகும் மெகாசாதனை.. சச்சினுக்கு பிறகு செய்யும் 2வது வீரர் இன்னும் 6 ரன்கள் தான்.. விராட் கோலி படைக்கப்போகும் மெகாசாதனை.. சச்சினுக்கு பிறகு செய்யும் 2வது வீரர்

இந்த கட்டுரையில் அப்படி எந்த வீரர்களுக்காக இரு அணிகளும் போட்டி போட்டனர். அதில் யார் வென்றார் என்று தற்போது காணலாம்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

U-19 கிரிக்கெட்டில் விளையாடி புகழ் பெற்றவர் இஷான் கிஷன். இவர் குஜராத் அணிக்காக முதல் சீசனில் விளையாடினார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் இஷான் கிஷனை தேர்வு செய்ய மும்பை அணிக்கும், சென்னை அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் 40 லட்சம் ரூபாயாக இருந்த அவரது அடிப்படை விலை 6.2 கோடி வரை சென்று இஷான் கிஷனை மும்பை வென்றது.

பொலார்ட்

பொலார்ட்

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் தொடரில் பொலார்ட், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு 2010ஆம் ஆண்டு பொலார்டை எடுக்க கடும் போட்டி நிலவியது. இதில் சென்னை, மும்பை, பெங்களுரு, கொல்கத்தா ஆகிய அணிகளும் பொலார்டை வாங்க அதிகபட்ச தொகையை தருவதாக கூறினர். இதனையடுத்து, நான்கு அணியும் தனி தனியே ரகசிய விலையை ஏலத்தில் வழங்க, அதில் மும்பை அணி பொலார்டை வென்றது.

பிளன்டாப்

பிளன்டாப்

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் ஆல் ரவுண்டர் பிளன்டாப் பங்கேற்றார். இவரை வாங்க சென்னை அணியும், மும்பை அணியும் கடுமையாக போட்டி போட, ரகசிய விலை நிர்ணயிக்கும் முறையில் சென்னை அணி பிளன்டாப்பை தட்டி சென்றது. ஆனால் பிளன்டாப்க்கு காயம் ஏற்பட, சென்னை அணிக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது

தோனி

தோனி

2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஏலத்தில் தோனியை தேர்வு செய்ய சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமே ஏலத்திற்கு 20 கோடி தான் ஒவ்வொரு அணியால் செலவு செய்ய முடியும். அதிகபட்சமாக வீரருக்கு ஆறரை கோடி தான் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அப்போது தோனிக்கு இரு அணியுமே ஆறரை கோடி வழங்கிய நிலையில், ரகசிய விலையை ஏலத்தின் போது இரு அணிகளும் தனி தனியாக பி.சி.சி.ஐ.யிடம் வழங்க, அதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, February 8, 2022, 16:51 [IST]
Other articles published on Feb 8, 2022
English summary
IPL Auction History – 4 Players created war bidding between CSK and MI ஐ.பி.எல். ஏலத்தில் சென்னையும் , மும்பையும் போட்டி போட்ட 4 வீரர்கள்..! தோனியை சி.எஸ்.கே. மீட்ட கதை..!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X