For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.4,800 கோடி தப்பியது.. பிசிசிஐ நிம்மதி பெருமூச்சு.. மும்பை நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

மும்பை: ஐபிஎல்-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் பிசிசிஐ வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் எந்த அளவிற்கு பிரபலமான ஒன்றோ, அதே அளவிற்கு அதிகளவில் பணம் கொட்டும் தொடராகும்.

இளம் படை மீது இப்படி ஒரு நம்பிக்கையா? வீரர்கள் வைத்த முக்கிய கோரிக்கை.. பிசிசிஐ காட்டிய கரார்! இளம் படை மீது இப்படி ஒரு நம்பிக்கையா? வீரர்கள் வைத்த முக்கிய கோரிக்கை.. பிசிசிஐ காட்டிய கரார்!

இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருகின்றன. அதற்காக ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி

டெக்கான் சார்ஜர்ஸ் அணி

ஐபிஎல் தொடரின் 2வது சீசனில் (2009)கோப்பையை வென்ற அணி டெக்கான் சார்ஜர்ஸ். 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கியது முதல் போட்டிகளில் பங்கேற்று வந்த இந்த அணியால் பி.சி.சி.ஐக்கு வழங்க வேண்டிய வங்கி உத்தரவாத தொகையான ரூ.100 கோடியை செலுத்த முடியாமல் போனது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமம் 2012இல் ரத்துசெய்யப்பட்டது.

தனி நபர் தீர்ப்பாயம்

தனி நபர் தீர்ப்பாயம்

ஐ.பி.எல்.லில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், நஷ்ட ஈடு கேட்டும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டி.சி.எச்.எல். நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மும்பை ஐகோர்ட்டின் உத்தரவுபடி நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவு

நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.கே.தாக்கர், ஐபிஎல்-ல் இருந்து டெக்கான் சார்ஜஸ் அணி நீக்கப்பட்டது சட்ட விரோதமானது எனக்கூறி, டெக்கான் சார்ஜஸ் நிறுவனத்துக்கு ரூ.4,814.67 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வழங்க வேண்டும். 2012-ல் இருந்து 10 சதவீத வட்டியை கொடுக்கவும் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் பிசிசிஐ இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

பிசிசிஐ மகிழ்ச்சி

பிசிசிஐ மகிழ்ச்சி

இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் மும்பை நீதிமன்றம் பிசிசிஐ-க்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எந்தவித நஷ்ட ஈட்டையும் வழங்க தேவை இல்லை எனக்கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அமைப்பு என்றுமே ஒப்பந்த விதிகளை பின்பற்றும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 16, 2021, 19:35 [IST]
Other articles published on Jun 16, 2021
English summary
BCCI wins case against Deccan Chargers termination, won't have to pay huge Amount now
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X