For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2017: முதல் முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த புனே கோப்பையை வெல்லுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. மும்பை இந்தியன்ஸ் -புனே அணிகள் இறுதிக்கட்ட பலப் பரீட்சையில் ஈடுபடுகின்றன.

By Devarajan

ஹைதராபாத்: ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10-வது ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டி கடந்த ஏப்ரல் 5ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்தது. மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் மும்பை (10 வெற்றி) 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

18 புள்ளிகளுடன் 2 வது இடத்தை புனே அணியும், 3 வது இடத்தை 17 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணியும், 4 வது இடத்தை 16 புள்ளிகளுடன் கொல்கத்தா அணியும் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

 புனே அணி இறுதிக்கு தகுதி

புனே அணி இறுதிக்கு தகுதி

முதல் 2 இடங்களை பிடித்த மும்பை - புனே அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மோதின. இதில் புனே 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் 3 வது இடத்தை பிடித்த ஐதராபாத், 4 வது இடத்தை பிடித்த கொல்கத்தா அணிகள் மோதின. இதில் கொல்கத்தா 7 விக்கெட்டில் வென்றது.

 மும்பையும் இறுதி

மும்பையும் இறுதி

இதையடுத்து நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 2 முறை சாம்பியனான மும்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இது 4 வது முறையாகும்.

 கோப்பை யாருக்கு

கோப்பை யாருக்கு

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 புனே -டோணி

புனே -டோணி

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிக்கு சென்று விட்டதால் புனேக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும் அதை சமாளித்து விளையாடுகிறார்கள். டோனியின் அனுபவம் ஆலோசனை புனே அணிக்கு உதவிகரமாக இருக்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

Story first published: Sunday, May 21, 2017, 12:38 [IST]
Other articles published on May 21, 2017
English summary
Mumbai Indians chase record third IPL crown, Rising Pune Supergiant hope to cash in on their psychological head-to-head advantage over Mumbai Indians.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X