ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிப்பு... டெல்லி சொதப்பல் தோல்வி

Posted By:
டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிப்பு

ஜெய்ப்பூர்: ஐபிஎல் ஆறாவது ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. அதையடுத்து 6 ஓவர்களில் 71 ரன்கள் என்று இலக்குடன் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்கள் முடிந்துள்ளன. முதலில் நடந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டியில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடியில் சிஎஸ்கே வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் டாஸ் வென்றார். முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 மூன்றாவது போட்டி

மூன்றாவது போட்டி

சீசனின் மூன்றாவது ஆட்டத்தில், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. நான்காவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணி 15.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 சிஎஸ்கேதான் டாப்

சிஎஸ்கேதான் டாப்

நேற்று இரவு நடந்த 5வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. அதையடுத்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. தலா 2 புள்ளிகளுடன் அதற்கடுத்த இடங்களில் ஐதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் உள்ளன.

 மிகவும் முக்கியமா ஆட்டம்

மிகவும் முக்கியமா ஆட்டம்

ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த சீசனின் ஆறாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 10 முறை வென்றுள்ளது. ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரஹானே மற்றும் இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆகியோரின் கேப்டன்சி திறமையை நிரூபிக்கும் ஆட்டமாகவும் இன்றைய போட்டி அமைய உள்ளது.

 ராஜஸ்தான் முதல் பேட்டிங்

ராஜஸ்தான் முதல் பேட்டிங்

இந்தப் போட்டியில் டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பீர் டாஸ் வென்றார். ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி கூறினார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, சொந்த மண்ணில் விளையாடும் ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. அதையடுத்து 6 ஓவர்களில் 71 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி டெர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Rajasthan Royals, Delhi Daredevils looking for first win in IPL
Story first published: Wednesday, April 11, 2018, 20:04 [IST]
Other articles published on Apr 11, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற