கேகேஆர் அணி எனக்கு பணம் தர வேண்டும்.. இர்பான் பதான் போட்ட அதிர்ச்சி டிவீட்.. என்ன நடந்தது?

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தமக்கு பணம் தர வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

India அணியின் கேப்டன் Rohit Sharma ODI Cricket விமர்சனம் பற்றி பதிலடி *Cricket

ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பைக்கு பிறகு கொல்கத்தா அணி தான் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்ட ஐபிஎல் தொடரில் கூட கொல்கத்தா அணி, இறுதிப் போட்டி வரை சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

முதல் போட்டியிலேயே இப்படியா.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தீபக் சஹார்.. ஆசிய கோப்பை அணியில் மாற்றமா முதல் போட்டியிலேயே இப்படியா.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தீபக் சஹார்.. ஆசிய கோப்பை அணியில் மாற்றமா

மெக்குல்லம் விலகல்

மெக்குல்லம் விலகல்

கொல்கத்தா அணியின் நீண்ட கால பயிற்சியாளராக இருந்த மெக்குல்லம் தலைமையில் அந்த அணி, அபாயகரமான அணியாகவே விளங்கியது. அதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மெக்குல்லம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, மெக்குல்லமிற்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பு வந்தது.

புதிய பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர்

இதனையடுத்து மெக்குல்லம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், புதிய பயிற்சியாளராக மத்திய பிரதேச ரஞ்சி அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட சந்திரகாந்த் பண்டிட் என்பவரை கேகேஆர் அணி தங்களது தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்தது. சந்திரகாந்த்தின் வழிகாட்டுதலின் படி மத்திய பிரதேச அணி, ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இர்பான் பதான் பாராட்டு

இர்பான் பதான் பாராட்டு

அப்போது, இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், சந்திரகாந்த் உள்ளூர் கிரிக்கெட்டில் மேஜிக் செய்து, சாதனை படைத்திருப்பதாக பாராட்டினார். எந்த அணியாவது, இவரை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று இர்பான் பதான் சந்திரகாந்தை பாராட்டி பல மாதத்திற்கு முன் டிவிட் போட்டு இருந்தார்.

பணம் கேட்ட இர்பான்

பணம் கேட்ட இர்பான்

தற்போது அந்த டிவிட்டை ஷேர் செய்த கொல்கத்தா அணி சிஇஓ வெங்கி மைசூர், இர்பான் பதான் பேச்சை தாங்கள் கவனித்து செயல்பட்டதாக குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்துள்ள இர்பான் பதான், என் ஆலோசனையை தான் நீங்கள் கேட்டு இருக்கிறிர்கள். அதற்கான உரிய பணத்தை எனக்கு வழங்க வேண்டும். என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்புகிறேன் என்று இர்பான் பதான் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவர்ந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Irfan Pathan asks Money to KKR Owner with Hilarious tweet கேகேஆர் அணி எனக்கு பணம் தர வேண்டும்.. இர்பான் தான் போட்ட அதிர்ச்சி டிவிட்.. என்ன நடந்தது?
Story first published: Friday, August 19, 2022, 13:36 [IST]
Other articles published on Aug 19, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X