For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் விவகாரம்…! இர்பான் பதானின் அந்த பிளான்…! சக்சஸ் ஆகுமா?

Recommended Video

Article 370 | Cricketers praises | 370 சட்டப்பிரிவு நீக்கம்!.. ஆர்ப்பரித்த விளையாட்டு உலகம்!-வீடியோ

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்க, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் இர்பான் பதான்.

இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் அணிகளில் ஜம்மு காஷ்மீர் அணியும் இருக்கிறது. ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரா கோப்பை, சையத் முஸ்டாக் அலி தொடர்களில் அந்த அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

விரைவில் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரப்போகிறது. இந்த தொடருக்கு உள்ளூர் அணிகள் தயாராக வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் அணியும் தயாராகி உள்ளது. அந்த அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

களத்தில் சிக்கல்கள்

களத்தில் சிக்கல்கள்

அதே போல, இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஜம்மு காஷ்மீர் அணியும் விளையாடுகிறது. அந்த அணியின் வீரராகவும், ஆலோசகராவும் இர்பான் பதான் இருக்கிறார். ஆனால் போட்டிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்து கொள்வதில் அவருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன.

தொடரும் தடுமாற்றம்

தொடரும் தடுமாற்றம்

அணியின் வீரர்களை தொடருக்கு தயாராக இருக்குமாறு தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்.எப்படி தொடர்பு கொள்வது என்று தடுமாறி வருகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தகவல் தொடர்பு தடையால் எந்தவொரு வீரரையும் இர்பான் பதானால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

டிவி விளம்பரம்

டிவி விளம்பரம்

கடைசியாக, ஜம்மு, காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆஷிக் அலி புகாரியை தொடர்பு கொண்டுள்ளார். இவர் ஒரு முன்னாள் டிஐஜி ஆவார். உள்ளூர் தொலைக்காட்சிகளில் மாலை நேரத்தில் விளம்பரம் கொடுத்தால் அது மக்களிடையே சென்று சேரும்.

புதிய ஆலோசனை

புதிய ஆலோசனை

எப்படியாவது வீரர்கள் அதை பார்ப்பார்கள். அதன்மூலம் அவர்களை தொடர்பு கொள்ளலாம் எனபுகாரி ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் இர்பான் பதான் வீரர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

பெரிய சவால்

பெரிய சவால்

இதுகுறித்து இர்பான் பதான் கூறியதாவது: காஷ்மீர் மற்றும் அங்குள்ள மாவட்டங்களில் உள்ள வீரர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய சவால். ஜம்மு வீரர்களுடன் தொடர்பில் உள்ளோம்.

தனித்தன்மையான நிலைமை

தனித்தன்மையான நிலைமை

டிவியில் விளம்பரம் கொடுத்ததன் மூலம் ஜம்முவில் நடக்கும் பயிற்சி முகாமுக்கு தேர்வான வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதல் நாளில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அடுத்து சில நாட்கள் இதற்கு ஆகும் என்று தெரிகிறது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த சூழ்நிலை. இதற்கு முன் நான் இதுபோன்ற காரியங்களில் இறங்கியது கிடையாது என்றார்.

Story first published: Thursday, August 29, 2019, 9:10 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
Irfan pathan plans to organize cricket players in jammu Kashmir.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X