
கோஹ்லி
கங்குலி உருவாக்கிய அணிதான் இந்திய அணியின் அடையாளமாக இருந்தது. ஆனால் டோணி வந்த பின் அதை மொத்தமாக மாற்றி தனக்கு என்று ஒரு அணி உருவாக்கினார். இளம் படை வந்தது. கோஹ்லியும் இப்போது டோணிக்கு நெருக்கமானவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு புதிய அணியை உருவாக்கியுள்ளார்.

இல்லை
கோஹ்லி தமிழக வீரர்களைப் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அஸ்வினை ஒருநாள் அணியில் இருந்து தூக்கியது சர்ச்சை ஆகியது. டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஓவர் கொடுக்காதது பிரச்சனை ஆனது. தினேஷ் கார்த்திக் களம் இறக்கப்படுவதே இல்லை என வரிசையாக நிறையக் காரணம் சொல்லப்பட்டது.

சர்ச்சை
இதனால் கோஹ்லி இப்படித்தான் என்று சர்ச்சையை உருவாக்கினார்கள். முக்கியமாக முரளி விஜய்க்கு சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்காமல் போனது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது.

திட்டம்
ஆனால் கோஹ்லி டோணியை போலவே செயல்படுகிறார். 2011 உலகக் கோப்பைக்காக அவர் இளம் வீரர்களை வைத்து அணியை உருவாக்கினார். தற்போது அதேபோல் கோஹ்லி தன் பேச்சைக் கேட்கும் அணியை இப்போதே தயார் செய்து வருகிறார். அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார்.

நிறையப் பேர்
மேம்போக்காகப் பார்த்தால் இந்திய அணியில் தமிழக வீரர்கள் களம் இறக்கப்படவில்லை என்று கூறலாம். ஆனால் சென்ற வருடம் தான் அதிக தமிழக வீரர்கள் இந்திய அணிக்குத் தேர்வானார்கள். வாஷிங்க்டன் சுந்தர், விஜய் சங்கர் என இளம்படைக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது இந்திய அணியில் தமிழக வீரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.

தமிழக வீரர்கள்
அதுபோல் அவருடைய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில்தான் அதிகமான தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். சென்னை அணியில் கூட இவ்வளவு தமிழக வீரர்கள் இல்லை. வாஷிங்க்டன் சுந்தர், முருகன் அஷ்வின் என எல்லோரும் அந்த அணியில் இருக்கிறார்கள்.

வாய்ப்பு இருக்கிறது
இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்திய அணியில் இன்னும் அதிகமான தமிழக வீரர்கள் இடம்பெறுவார்கள். ஆம் பெரும்பாலும் கோஹ்லி பெங்களூர் அணியில் இருந்துதான் வீரர்களை அதிகம் எடுப்பார். இதனால் வாஷிங்க்டன் சுந்தர், முருகன் அஷ்வின் அணியில் முக்கிய இடத்தை எதிர்காலத்தில் பெறுவார்கள்.