For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜா, புஜாராவுக்கு நோட்டீஸ்.. ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அதிரடி.. பரபர தகவல்!

மும்பை : ஐந்து முன்னணி கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

செத்தேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோருக்கு தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம், பிசிசிஐ தான் எனவும் கூறப்படுகிறது.

எங்க தலயாகவே வாழ்ந்து இருந்தாரே.. பாலிவுட் நடிகர் தற்கொலை.. தோனி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!எங்க தலயாகவே வாழ்ந்து இருந்தாரே.. பாலிவுட் நடிகர் தற்கொலை.. தோனி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

விதிமுறை

விதிமுறை

தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தில் 110 கிரிக்கெட் வீரர்கள் பரிசோதனை செய்ய பதிவு செய்து உள்ளனர். உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் விதிமுறைப்படி அனைத்து விளையாட்டு வீரர்களும் ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனை மற்றும் அது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

படிவத்தை நிரப்ப வேண்டும்

படிவத்தை நிரப்ப வேண்டும்

அதன் ஒரு பகுதியாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது பற்றி இணையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கான படிவத்தை இணையத்திலேயே நிரப்பி அளிக்க வேண்டும். இதை வீரர்களே செய்து கொள்ளலாம்.

யார் செய்யலாம்?

யார் செய்யலாம்?

சில வீரர்களுக்கு இது குறித்த புரிதல் இல்லை என்றால் அவர்கள் விளையாட்டு சார்ந்த அமைப்பு அவர்களுக்காக இதை செய்யலாம். கிரிக்கெட் வீரர்கள் அனைவரிடமும் இணைய வசதிகள், இணைய பயன்பாடு குறித்த புரிதல் இருந்தாலும் பிசிசிஐ தான் அவர்கள் சார்பாக இந்த பணியை செய்து வருகிறது.

பிசிசிஐ அனுப்பவில்லை

பிசிசிஐ அனுப்பவில்லை

இந்த நிலையில், அந்த குறிப்பிட்ட ஐந்து வீரர்களின் படிவங்களை குறித்த நேரத்திற்குள் பிசிசிஐ அனுப்பவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் தான் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீரர்கள் சார்பாக பிசிசிஐ இதற்கு பதில் அளித்துள்ளது.

பாஸ்வேர்டு சிக்கல்

பாஸ்வேர்டு சிக்கல்

அந்த பதிலில் "பாஸ்வேர்டு" சிக்கல் காரணமாக தங்களால் குறித்த நேரத்திற்குள் படிவங்களை நிரப்ப முடியவில்லை. தற்போது அந்த சிக்கல் தீர்ந்து விட்டது. விரைவில் அதை முடித்து விடுவதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்திடம் விளக்கம் கூறி உள்ளது.

தடை செய்யப்படவும் வாய்ப்பு

தடை செய்யப்படவும் வாய்ப்பு

இந்த விளக்கம் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது அந்த குறிப்பிட்ட வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்று முறை தொடர்ந்து ஒரு வீரர் தான் இருக்கும் இடம் குறித்த தகவலை அளிக்காமல் போனால் அவர் தடை செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில், பிசிசிஐ ஏன் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கிரிக்கெட் வீரர்கள் தங்களின் விவரங்களை தாங்களே நிரப்பி அனுப்ப முடியாதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. சிறிய பாஸ்வேர்டு சிக்கலை தீர்க்க இத்தனை காலம் ஆகுமா? என்றும் சில சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

Story first published: Sunday, June 14, 2020, 18:14 [IST]
Other articles published on Jun 14, 2020
English summary
Jadeja, Pujara received notice from National Anti Doping Agency
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X